பீகாரில் சாலையோரங்களில் செயல்படும் டீ கடைகளுக்கு மோடியின் பெயரை சூட்டும் புதுமையான பிரசாரத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது.
பாஜக.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ஏழை குடும்பத்தில் பிறந்தவர். சிறுவனாக இருந்தபோது ரயில்களில் டீவிற்றதாக கூறியிருந்தார். அடுத்த வருடம் நடக்கும் தேர்தலுக்காக இப்போது அவர் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். அதேபோல், அவருடைய கட்சியினரும் அவருடைய பிரசார பொதுக் கூட்டங்களுக்கு புதுமையான முறையில் கூட்டத்தைசேர்த்து வருகின்றனர்.
பீகாரில் மோடியை நம்பர்,1 எதிரியாக நினைக்கும் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த நிதிஷ் குமார் ஆட்சிசெய்து வருகிறார். பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாக பெரிய கூட்டத்தைகூட்டி பொதுக்கூட்டம் நடத்திவரும் மோடி, பாட்னாவில் வரும் 27ம் தேதி காந்திமைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். அப்போது, நிதிஷுக்கு மோடியின் பலத்தை காட்டும் முயற்சிகளில் இம்மாநில பாஜக.வினர் ஈடுபட்டுள்ளனர்.
இம்மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ.க்களான நிதின்நவீனும், அருண்குமாரும், சிறு வயதில் டீ விற்றதாக மோடி கூறியதையே அடிப்படையாககொண்டு, டீ கடைக்காரர்களை வளைத்துபோடுகின்றனர். சாலையோரங்களில் டீ கடை வைத்துள்ளவர்களிடம், மோடி டீ விற்று எப்படி முதல்வராக , பிரதமர் வேட்பாளராக ஆனார் என்று கூறி அவர்களை தங்கள் வசப்படுத்தி, டீகடையின் பெயரையே ‘நமோ டீகடை’ என்று மாற்றுகின்றனர் இவர்கள். இதுவரை 29 கடைகளுக்கு இதுபோல் பெயரை மாற்றி விட்டனர்.
நரேந்திரமோடியின் முதல் 2 எழுத்துகளை எடுத்து ‘நமோ’வை உருவாக்கியுள்ளனர். 27ம் தேதி பொதுக் கூட்டத்துக்கு மோடி வரும்முன்பாக இதுபோல், 400 கடைகளின் பெயர்களை மாற்றுவதுதான் தங்களுடைய இலக்கு என நவீனும், அருணும் கூறியுள்ளனர். மோடியின் பெயர் சூட்டப்பட்டகடைகளின் உரிமையாளர்களை கவுரவப்படுத்தும் வகையில், அந்த பகுதியை சேர்ந்த பாஜக.வினர் அந்தகடைக்கு சென்று டீ குடிக்கின்றனர். இதனால் விற்பனை அதிகமாகிவருவதால், மற்ற டீ கடைக்காரர்களும் மோடியின் ஆதரவாளர்களாக மாறி, கடைகளின் பெயர்களை மாற்றிவருகின்றனர்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.