தண்டனை பெற்றவர்கள் சட்டம் உருவாக்குபவர்களாக இருக்கலாமா

 அடுத்தடுத்து இரண்டு தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. காவல் துறையால் கைது செய்யப்பட்ட வேட்பாளர்கள், வாக்களிக்கவும் அதன் விளைவாக தேர்தலில் நிற்பதையும் தடுத்து நிறுத்துவது குறித்த கேள்வியை முதல் தீர்ப்பு எழுப்பியிருந்தது. பா.ஜ.க. உட்பட அனைத்து கட்சிகளுமே இதனால் ஜனநாயக நடவடிக்கைகள் பாதிக்கும் என்று கருதின. சட்டம் ஒழுங்கு என்பது மாநிலங்கள் சம்மந்தப்பட்டது. அனைத்து காவலர்களும்

வேட்பு மனு தாக்கல் செய்யும்போது சில வேட்பாளர்களைக் கைது செய்து தேர்தல் நடவடிக்கைகளைத் திசை திருப்ப முடியும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 62(5)ஆம் பிரிவு ஏற்கனவே திருத்தியமைக்கப்பட்டது.

இரண்டு தீர்ப்புகளில் இரண்டாவது அதிமுக்கியமான பிரச்சினை சம்மந்தப்பட்டது. கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் அவர்களின் மேல் முறையீட்டைத் தள்ளுபடி செய்யும்வரை பதவியில் நீடிக்க வேண்டுமா? அரசியல் சட்டத்தின் 102, 191 பிரிவுகளுக்கு எதிராக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8(4) பிரிவு இருப்பதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

2013, ஆகஸ்ட் 13ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளின் கூட்டத்தை அரசு கூட்டியது. திருமதி. சுஷ்மா ஸ்வராஜும், நானும் கூட்டத்தில் கலந்துகொண்டோம். இந்தக் கூட்டத்தில், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, பிரிவு 8(4) கீழ் தண்டனைக்குள்ளான உறுப்பினர்களை தகுதியிழக்கச் செய்வது, நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம், சிறையில் உள்ள நபர்கள் வாக்களிக்கவும், தேர்தலில் போட்டிடவும் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகிய பிரச்சினைகளின் முக்கியத்துவத்தை கருதி விவாதிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். அதன் மூலம் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.

தண்டனைக்குள்ளான மக்கள் பிரதிநிதி உறுப்பினராகத் தொடர்வது குறித்து ஏராளமான பரிந்துரைகள் விவாதிக்கப்பட்டன. விவாதத்தின் முடிவில் வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசு இறுதி செய்து நிலைக் கமிட்டி முன்பு வைக்கப்படும் என்று எங்களிடம் சொல்லப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு பா.ஜ.க. முழுமையாக ஆதரவளிப்பதாக அரசு காட்டிக்கொள்ள முயற்சித்தது. உண்மையில் பல்வேறு தேர்வுகள் மட்டுமே விவாதிக்கப்பட்டன. தவறான நோக்கத்துடன் அரசு பரப்பி வருபவைக்கு ஆதரவாகப் பேசுவதற்கு நான் கட்டுப்படவில்லை.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, 2013, ஆகஸ்ட் 15ஆம் தேதி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றியப் பிறகு என்னிடம் பேசிய மத்திய சட்ட அமைச்சர் இதுகுறித்து மத்திய அரசு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர சிந்தித்து வருவதாகக் கூறினார். மத்திய நிதியமைச்சர் முன்பாக இதைக் கூறினார். நான் இந்தத் திட்டம் பற்றிய எனது அச்சத்தைத் தெரிவித்தேன். எனது கவலை என்னவென்றால் தண்டனைக்குரியவர்கள் சட்டம் இயற்றுபவர்களாகத் தொடரும் விதத்தில் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவருவது மக்கள் கருத்துக்கு மாறாக உள்ளதே என்பதுதான். எந்த நிலையிலும் கையளவே உள்ள இப்படிப்பட்ட மக்களிடம் பொறுப்பைத் தருவது ஏற்புடையதல்ல. நாம் சுலபமாக இந்தத் தீர்ப்பின் படி வாழ்ந்துவிடமுடியும். இந்தத் தீர்ப்பை மாற்றுவதற்காக அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரத் தேவையில்லை. அரசியல் சட்டத் திருத்தத்திற்கு மாறாக சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக சட்ட அமைச்சர் என்னிடம் தெரிவித்தார்.

சில நாட்களுக்குப் பிறகு மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் 8(4) பிரிவில் திருத்தம் கொண்டுவர சிந்தித்து வருவதாக அரசு எங்களிடம் தெரிவித்தது. நான் இந்த விவகாரத்தை சட்ட நிபுணர்கள் உட்பட பல்வேறு விஷயம் தெரிந்தவர்களிடம் கலந்து பேசி ஆய்வு செய்தேன். 8(4) பிரிவில் திருத்தம் கொண்டு வரப்பட்டால் அந்தப் பிரிவு கொண்டுவரப்பட்டதற்கான உண்மையான நோக்கம் அடிப்பட்டுவிடும் என்று புரிந்துகொண்டேன். இதை மத்திய சட்ட அமைச்சர்களிடம் நான் தெரிவித்தேன்.

2 செப்டம்பர், 2013 அன்று பா.ஜ.க. நாடாளுமன்றக் கட்சியின் பொதுக்குழுவ கூட்டப்பட்டப்போது, இந்தத் திருத்தம் ஏன் சட்ட விரோதமானது என்று எனது சகாக்களிடம் விவரித்தேன். தண்டனை பெற்றவர்கள் சட்டம் உருவாக்குபவர்களாக இருப்பதை பெரும்பாலான மக்கள் எதிர்ப்பார்கள் என்பதால் இதை ஏற்க முடியாது என்றும் நான் தெரிவித்தேன். உண்மை என்னவென்றால் இந்தத் திருத்தத்தையும் தகவல் அறிக்கை சட்டத்தின் மூலமாக தெரிந்துகொண்டு ஊடகங்களில் அரசியல் கட்சிகள் அதே நாளில் நாடாளுமன்றத்தில் திருமதி. சுஷ்மா ஸ்வராஜின் அறைக்கு மத்திய சட்ட அமைச்சர் வந்தார். விஷயம் கேள்விப்பட்டு நானும் சென்றேன். அரை மணி நேரம், இந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத் திருத்தம் ஏன் செல்லுபடியாகாது என்பது குறித்து எங்கள் மூவருக்கு இடையில் விவாதம் நடந்தது.

இது நெறிமுறையில் கேள்விக்குரியதும் சட்ட விரோதமானதும் ஆகும். 6.9.2013 அன்று நாடாளுமன்றம் இதைத் தள்ளுபடி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தத் திருத்தம் உள்ளிட்ட சில மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது. நானும், திருமதி. சுஷ்மா ஸ்வராஜும் இந்தத் திருத்தத்தின் பகுதியை நாங்கள் கண்டிப்பாக எதிர்ப்போம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தோம். இருவேறு கருத்துக்கள் இருந்ததால் இது நிலைக் கமிட்டி முன்பு வைக்கப்படும் என்று அரசு எங்களுக்குத் தெரிவித்தது.

நிலைக் கமிட்டி முன்பாகப் மசோதா பற்றிய பரிந்துரை நிலுவையில் உள்ள நிலையில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டப்போது நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். அவசர சட்டம் கொண்டுவரப்பட்டத்தை நாங்கள் பல்வேறு நிலைகளிலும் எதிர்க்கிறோம்.

இந்த  மசோதா சம்மந்தமாக தொடர்ச்சியான விவாதங்கள் நடந்துவருகின்றன. இவை அனைத்திலும் பா.ஜ.க. தனது எதிர்ப்பை அரசுக்குத் தெரிவித்தது. அந்த விவாதங்களில் சிலவற்றின் பதிவுகள் மேலே உள்ளன.

அழுத்தமான அரசு மூலமாக தவறான தகவல்கள் பிரசாரம் செய்யப்படும் நிலையில் மேற்கண்ட உண்மைகளை நான் வெளியிடுகிறேன்.

நன்றி ; பாஜக எதிர்கட்சி தலைவர் அருண்  ஜெட்லி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...