பா.ஜ.க பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திரமோடி இன்று பிற்பகல் சென்னைவருகிறார். இதையடுத்து சென்னையில் உச்சகட்டபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடுமுழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவுதிரட்டி வருகிறார் மோடி. கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற பா.ஜ.க இளந் தாமரை மாநாட்டில் அவர் பங்கேற்றார். சுமார் நான்கு லட்சம்பேர் திரண்ட இந்தமாநாடு, அனைத்து அரசியல் கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
இந்நிலையில், நானி பல்கிவாலா அறக்கட்டளை விழாவில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை சென்னைவருகிறார் மோடி. பிற்பகல் 2.30 மணிக்கு தனிவிமானம் மூலம் சென்னைவரும் அவருக்கு மீனம்பாக்கம் பழையவிமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பாஜகவினர் ஏற்பாடுசெய்துள்ளனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 40ஆயிரம் பேர் இந்த வரவேற்பில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்க படுகிறது .
விமானநிலைய வரவேற்பு முடிந்ததும் தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு மோடிசெல்கிறார். அங்கு பா.ஜ.க மூத்த தலைவர்கள், மாநில நிர்வாகிகளுடன் வரும் மக்களவைத்தேர்தல் பணிகள், கூட்டணிகுறித்து ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர், சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெறும் நானிபல்கிவாலா அறக்கட்டளை விழாவில் பங்கேற்று நானி பல்கிவாலா நினைவுச் சொற்பொழி வாற்றுகிறார்.
இந்தவிழாவில் பத்திரிகையாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண்செüரி எழுதிய, "சுயதுரோகம் – இந்தியாவின் சீனக்கொள்கைகள்' என்ற நூலை மோடி வெளியிடுகிறார்.
பத்திரிகையாளர் சோ ராமசாமி, நானி பல்கிவாலா அறக்கட்டளை அறங்காவலர் என்.எல். ராஜா உள்ளிட்டோரும் விழாவில் பேசுகின்றனர். இந்நிகழ்ச்சி முடிந்ததும் நேராக தனிவிமானம் மூலம் ஆமதாபாத் புறப்பட்டுச்செல்கிறார் மோடி.
அவருடைய வருகையை முன்னிட்டு சென்னை விமானநிலையம், தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகம், சென்னை பல்கலைக் கழகம் ஆகியவை போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர் செல்லும்பாதை முழுவதும் பாதுகாப்புக்காக ஏராளமான காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.