நரேந்திரமோடி பொதுக்கூட்டத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பை கண்டித்து தமிழகத்தில் பா.ஜனதா சார்பில் இரண்டு நாள்கள் கண்டனப் போராட்டம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாரதீய ஜனதா கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்ட பின்னர், நாடு முழுவதும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம், மக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். மக்கள் சக்தி அவர் பக்கம் சாய்வதையும், பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் அவர் பிரதமர் ஆவது உறுதி என்பதும் நிச்சயமாகிவிட்ட நிலையில், நரேந்திரமோடியை கொலை செய்ய பல தீய சக்திகள் கங்கணம் கட்டி பணிபுரிந்து வருகின்றன.
இந்நிலையில் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நரேந்திரமோடி பேச இருந்த கூட்டத்தை சீர்குலைப்பதற்காக கூட்டம் நடக்க விருந்த பகுதியிலும், ரெயில் நிலையத்திலும் தொடர் குண்டுவெடிப்புகள் நடத்தி பலர் கொல்லப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக நரேந்திரமோடி காப்பாற்றப்பட்டு உள்ளார். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தொண்டர்கள் பொது நிகழ்ச்சியில் விழிப்புணர்வோடு இருந்து நம்மை நாம் காவல் காக்க தயாராக இருக்க வேண்டும். பயங்கரவாத செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திங்கள்கிழமை (அக்.28) மற்றும் செவ்வாய்க்கிழமை (அக்.29) ஆகிய இரு நாள்கள் கண்டன போராட்டம் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். . சென்னையில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டனப் போராட்டம் நடக்கிறது.
இவ்வாறு பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.