பீகார்மாநிலம் பாட்னாவில் மோடி பங்கேற்ற கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் காயமுற்ற தீவிரவாதி அய்னுல் என்ற தாரிக் சிகிச்சை பலன்அளிக்காமல் உயிரிழந்தான்.
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பிரசார கூட்டத்தை சீர்குலைக்க, கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் பலியானார்கள். 80க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்புகளை இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் திட்டமிட்டு நடத்திஇருப்பது தெரியவந்தது.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இம்தியாஸ் அன்சாரி, தவ்சீம், தாரிக்அன்சாரி ஆகிய 3 பேரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தினர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 5 பேர் கைதாகியுள்ளனர் முக்கிய குற்றவாளி ஒருவனை போலீசார் தேடிவருகின்றனர். இந்த நிலையில் குண்டு வெடிப்பில் காயமடைந்த குற்றவாளி தாரிக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனால் இந்த வழக்கில் ஆதாரங்களை திரட்டுவதில் போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.