பண்டிகைகளின் அரசன் தீபாவளி

 ஒவ்வொரு பண்டிக்கைக்கும் ஒரு தனித்துவம் உண்டு. பொங்கலுக்கு பொங்கலும், கரும்பும், ராம நவமிக்கு பாணகம், சிவராத்திரிக்கு கலி, கிருஷ்ண ஜெயந்திக்கு வென்னை மற்றும் சீடை, நவராத்திரிக்கு சுண்டல், சரஸ்வதி ஆயுத பூஜைக்கு பொரி கடலை, விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை, கார்த்திகைக்கு தீபமும், பொரியுரண்டையும்.

 

ஆனால் பண்டிகைகளின் அரசன் தீபாவளிக்கு ?

தீபாவளி என்றாலே அதிகாலை எண்ணை குளியலும், பட்டாசும்தான். பட்டாசு இல்லாத தீபாவளியை கற்பனை செய்துக் கூட பார்க்க முடியாது.

ஒரு பதினைந்து இருபத்து ஐந்து வருடம் முன்பு தீபாவளி வருவதற்கு ஒரு மாதம் முன்பே பட்டாசுகள் ஒலிக்க தொடங்கும். தீபாவளி நெருங்க நெருங்க அது அதிகரிக்கும். ஆனால் இன்று. தீபாவளி அன்று ஒரு நாளைக்கு மட்டுமே என்று இது சுருங்கி விட்டது. ஏழைக் குழந்தைகளின் கைகளில் இருந்து பட்டாசுகள் பறிக்கப் பட்டு விட்டன. பட்டாசு என்பது பங்களா வீட்டு மக்கள் வெடிக்கும் பொருளாகி விட்டது. பணக்கார குழந்தைகளின் வெடி முழக்கங்கள், ஏழைக் குழைந்தகளின் ஏக்கங்களை இன்னும் அதிகரிக்கத்தானே செய்யும் ? பண்டிகை என்பது அனைவராலும் கொண்டாடப்பட வேண்டியது அல்லவா ?

பட்டாசுகள் தேவையற்றவை என்று சிலர் சொல்வதுண்டு. காசை கரியாக்காதே, என்று சொல்பவரை பார்த்து கேட்கிறேன், நீங்கள் இறந்தால் உங்கள் உடம்பு கூடதான் கரியாகப் போகிறது. அந்த உடம்பிற்காக என்னவெல்லாம் செய்கிறீர்கள் நீங்கள்.

உலக அளவில் நடத்தப்படும் தொழிற்சாலை புகைகளாலும், வாகண புகைகளினாலும் நடக்காத சுற்று சூழல் மாசு தீபாவளி அன்று நடந்து விடப் போகிறதா ? பிள்ளை பருவத்தில் பாரம்பரியமாக பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதை தடுப்பதில் அப்படி என்ன ஒரு கேடு கெட்ட எண்ணம் பலருக்கு உள்ளது என்று புரியவில்லை. நம் கலாச்சாரத்தை சுத்தமாய் அழித்து விடும் நோக்கில் நடத்த படும் பல்வேறு சூழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. “ஹாப்பி நியு இயர்” என்று கோடிக்கணக்கான செலவில் சீனத்து பட்டாசுகளை வெடிப்பது இப்போது புதிய ஃபேஷன் ஆகி போய்விட்டது.

தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பது அதிகரிக்கப் பட வேண்டும். பண்டிகை கொண்டாட்டங்கள் தான் பாரத கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு. தீபாவளி பண்டிகைகளின் அரசன், பட்டாசுகள் அந்த கோலாகல‌த்தின் அடிப்படை. அதை பிடுங்க நினைப்பவர்கள் அதற்கு பெரும் துரோகத்தை இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை கொழித்திடுவோம், இந்த ஒளிமிகு திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிடுவோம்.

One response to “பண்டிகைகளின் அரசன் தீபாவளி”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...