உபி.,யில், முசாபர் நகர் மாவட்டத்தில், சமீபத்தில், இரு மதங்களை சேர்ந்தவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில், 62பேர் இறந்தனர்.
இந்தகலவரத்தை தூண்டிவிட்டதாக, பொய் குற்றச்சாட்டை சுமத்தி உ.பி., மாநில, பா.ஜ.க., – எம்.எல்.ஏ.,க்கள், சங்கீத்சோம், சுரேஷ்ராணா ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மீது, தேசியபாதுகாப்பு சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் தற்போது ஜாமினில் வந்துள்ளனர். இந்நிலையில், உபி., மாநிலம் ஆக்ராவில், பாஜக., பிரதமர்வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திரமோடி பங்கேற்கும், பிரமாண்ட பிரசாரகூட்டம், நாளை நடக்க உள்ளது. இந்தகூட்டத்தில், எம்எல்ஏ.,க்கள், சங்கீத்சோம், சுரேஷ்ராணா ஆகியோருக்கு, பாராட்டுவிழா நடத்தி, அவர்களை கவுரவிக்கப்போவதாக, அம்மாநில பா.ஜ.க., அறிவித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து, அம்மாநில பாஜக., செய்திதொடர்பாளர், விஜய்பகதூர் கூறியதாவது: கலவரத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப் படவில்லை. பழிவாங்கும் நோக்கத்துடன், எங்கள்கட்சி எம்எல்ஏ.,க்களை, சமாஜ்வாதி அரசு, கைதுசெய்துள்ளது. எம்.எல்.ஏ.,க்களின் மனஉறுதியை பாராட்டும்வகையில், அவர்களை, கவுரவிக்க முடிவுசெய்துள்ளோம். இவ்வாறு, விஜய் பகதூர் கூறினார்.
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
Leave a Reply
You must be logged in to post a comment.