பிரிக்கப் படாத பழைய பம்பாய் மாநிலத்தின் முதல்வராக மொரார்ஜி தேசாய் இருந்தபோது, அவருடைய அன்பு மகள் இந்து, மருத்துவக் கல்லூரியில் இறுதித்தேர்வு எழுதி முடித்தாள். முதல்வகுப்பில் தேர்ச்சிபெறும் தகுதி மிக்க இந்து, தேர்வில் தவறிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை மறுத்த சகமாணவிகள் இந்துவை தேர்வுத்தாளின் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும்படி வற்புறுத்தினர். ஆனால், மொரார்ஜி தேசாய் அதை மறுத்துவிட்டார்.
'மறுமதிப்பீடு செய்து, தாளைத்திருத்திய ஆசிரியரின் தவறு கண்டுபிடிக்கப்பட்டு, உரியமதிப்பெண்களைப் பெற்று.. உன்தகுதி காரணமாகவே நீ தேர்ச்சியடைந்தாலும், முதல்வராக உள்ள நான் அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்தியதாக சமூகம் அர்த்தப்படுத்தி பழிதூற்றும். இந்தமுயற்சியைக் கைவிட்டு அடுத்துவரும் தேர்வுக்கு உன்னை ஆயத்தம்செய்வது தான் சரியானது என்று மொரார்ஜி தேசாய் சொன்னதும், மனம் உடைந்த இந்து தற்கொலை செய்துகொண்டார்.
கீதையின் பாதையில் வாழ்க்கையை வகுத்துக்கொண்ட மொரார்ஜி மகளின் இழப்பை மெளனமாகத் தாங்கிக்கொண்டார். பொதுவாழ்வில் தூய்மை என்பதற்கு தனதுமகளை பலிகொடுத்து முன்னுதாரனததை ஏற்படுத்தியவர் மொரார்ஜிதேசாய். இப்போதைய அரசியல் வாதிகளை சற்றே எண்ணிப்பாருங்கள்.
குஜராத் மாநிலத்தை உள்ளடக்கிய பம்பாய்மாகாணத்தின் முதல்வராகவும், இந்தியாவின் நிதி மந்திரியாகவும், பிரதமராகவும் பணியாற்றிய மொரார்ஜி, தன்நெடிய வாழ்வின் இறுதிநாட்களில் பலர்வாழும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒருவாடகை வீட்டில் வசித்தார். வீட்டின் உரிமையாளர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் தேசாயின் குடும்பம் வெளியேறவேண்டும் என்று தீர்ப்புரைத்தது.
அதிர்ச்சியிலும் அவமானத்திலும் உறைந்துபோன மொரார்ஜியின் மருமகள் மனநிலை பாதிக்கப்பட்டு மாடியிலிருந்து கீழேவிழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்திய பிரதமராக இருந்தவர்க்கு சொந்தவீடில்லை என்பது இதிகாசச்செய்தி அன்று. நம் கண்முன்னே கண்டநிஜம்.
ஆனால், தமிழ்நாட்டு மேடைகளில் 'மொரார்ஜி மில்' தேசாய்க்கு சொந்தம் என்று பொய்யை கடைவிரித்தவர்கள், இன்று ஆலை அதிபர்களாக, சோலைமிராசுகளாக சொர்க்கவாழ்வு வாழ்கின்றனர். என்ன நண்பர்களே! அதிர்ச்சியாக இருக்கின்றதா? நம்பவே முடியவில்லையா? ஆனால் இதுதான் நிஜம்
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.