மிசோரமிலும் ஆளும் காங்கிரஸ்க்கு பெரும்பின்னடைவு ஏற்படும் என்றும் அம்மாநிலத்தில் தொங்கு சட்ட சபைதான் அமையும் என்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் (எக்ஸிட்போல்) தெரிவிக்கின்றன.
டெல்லி, சத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தான் மற்றும் மிசோரம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்ட சபைகளுக்கு தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் பதிவானவாக்குகள் வரும் 8-ந்தேதி எண்ணப்படுகின்றன.
இந்ததேர்தலில் காங்கிரஸ் , ராஜஸ்தான் , டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுக்கிறது. பாஜக ஆளும் மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களை அக்கட்சி தக்கவைத்து கொள்ளும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
காங்கிரஸ் வசம் உள்ள காங்கிரஸின் மானத்தை காக்கும் என்று கருதப்பட்ட மாநிலமான மிசோரமும் காங்கிரசை கைவிட்டுவிடும் என்று தெரிகிறது. அங்கு தொங்கு சட்டசபைக்கே வாய்ப்பிருப்பதாக எக்ஸிட் போல்-ல் தெரிவிக்கிறது.
40 தொகுதிகளைகொண்ட மிசோரமில் ஆளும் காங்கிரஸுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 18 இடங்கள்மட்டும்தான் கிடைக்குமாம். மிசோரம் தேசியமுன்னணி 15 இடங்களை கைப்பற்றும் என்பதால் தொங்கு சட்ட சபைக்கே வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.