பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க தனிநீதிமன்றம் அமைக்கவேண்டும், இந்தியாவின் நல்லதொரு பிரதமராக நரேந்திரமோடி இருப்பார் என இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து விருதுநகரில் செய்தியாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது; மத்திய அரசு மதக்கலவர தடுப்பு மசோதாவை கொண்டுவர கூடாது. இதைக் கொண்டுவந்தால் மாநில அளவில் பிரச்னைகள் ஏற்படும். இம் மசோதாவுக்கு தமிழகமுதல்வர் ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதை வரவேற்கிறோம்.
பயங்கரவாதத்தை முழுமையாக ஒடுக்க தற்போதுள்ளசட்டத்தை முறையாக அமல்படுத்தினாலே போதும். பல்வேறு வழக்குகளில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள பிலால்மாலிக், போலீஸ்பக்ருதீன் ஆகியோர் பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்கள் என்பதால், கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று பயங்கரவாத வழக்குகளை எல்லாம் தனிநீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தவேண்டும். அயோத்தியில் ராமர்கோயிலை மத்திய அரசே கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அண்மையில் நடந்துமுடிந்த சட்டப் பேரவை தேர்தல்களில் மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக. முன்னணியில் உள்ளதாக தகவல்வந்துள்ளது. இந்தியாவின் நல்லதொரு பிரதமராக நரேந்திரமோடி இருப்பார். இப்பதவிக்கு தகுதியானவராகவும் அவர் இருப்பார். என்றுமே இந்து முன்னணி பா.ஜ.கவை ஆதாரிக்கும் என்றார்.
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.