மெரினா கடற்கரையை தினறடித்த ஒற்றுமை ஓட்டம்

 இந்தியாவின் இரும்புமனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்ல பாய் படேலுக்கு குஜராத்தில் நர்மதை நதிக்கரையோரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்படுகிறது.

குஜராத் முதல்வர் நரேந்திரமோடி இதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறார். இந்த சிலைக்காக இந்தியா முழுவதிலும் விவசாயிகளிடமிருந்து அவர்கள் பயன் படுத்திய கலப்பை, மண் வெட்டி, அரிவாள் போன்ற பழைய இரும்புபொருட்கள் சேகரிக்கப்படுகின்றன.

இதையொட்டி பட்டேலின் 63வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் 1500 இடங்களில் பா.ஜ.க சார்பில் ஒற்றுமை ஓட்டம் நடத்தப்பட்டது. தமிழகத்தில் 67 இடங்களில் இந்தஓட்டம் நடைபெற்றது.

சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஒற்றுமை ஓட்டத்தை பா.ஜ.க தேசிய செய்திதொடர்பாளர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார்.

பா.ஜ.க.,வின் மூத்த தலைவர் இல.கணேசன், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசியசெயலாளர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணைத்தலைவர் எச். ராஜா, மாநில செயலாளரும், சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைப்பு குழுவின் தமிழக ஒருங்கிணைப்பாளருமான வானதிசீனிவாசன், வணிகர் சங்க பேரவை மாநில தலைவர் வெள்ளையன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை மூர்த்தி, மீனவர் அமைப்பை சேர்ந்த அன்பழகன், முன்னாள் டிஜிபி,க்கள் நடராஜ், பாலச் சந்திரன், ஐகோர்ட்டு வக்கீல் சங்கதலைவர் பால். கனகராஜ் மற்றும் முக்கியபிரமுகர்கள் பங்கேற்றனர்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவமாணவிகள், சிறுவர், சிறுமிகளும் இந்த ஒற்றுமை ஓட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஒற்றுமை ஓட்டத்தில் கலந்துகொண்டதால், மெரினா கடற்கரையில் திரும்பிய திசையெல்லாம் மனித தலைகளாகவே காட்சி தந்தது .

ஒற்றுமை ஓட்டம்குறித்து வானதி சீனிவாசன் கூறியதாவது:–

பட்டேலின் சிந்தனையையும், ஒற்றுமை உணர்வையும் பொதுமக்களிடம் கொண்டுசேர்க்கும் விதத்தில் இந்த ஒற்றுமை ஓட்டம் நடத்தப்பட்டுள்ளது.

குஜராத்மாநிலத்தில் உலகிலேயே உயரமான பட்டேல்சிலையை அமைப்பதற்காக, நாடுமுழுவதும் இரும்பு சேகரிக்கும் பணி நடைபெற உள்ளது. இந்தியாமுழுவதும் 6 லட்சம் கிராமங்களில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் 12,500 கிராம பஞ்சாயத்துகளில் விவசாயிகள் பயன் படுத்திய பழைய இரும்பு பொருட் களை சேகரிக்க உள்ளோம். தமிழகம்முழுவதும் இன்று நடைபெற்ற ஒற்றுமை ஓட்டத்தில் 80 ஆயிரம்பேர் பங்கேற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...