இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா திரு. நம்மாழ்வார் அவர்களி;ன் மரணம் அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும்.
விவசாயிகளின் நண்பன் மண்புழு என்று சொல்வார்கள். எப்படி மண்புழு மண்ணிற்குள் இருந்து வேருக்கு துணையாக உழைக்கிறதோ அதே போன்று தன்னை பிரபலபடுத்திக் கொள்ளாமல் நமது நாட்டு விவசாயிகளின் நலன் காப்பதற்காக தன்னையே அர்பணித்த பெருந்தகையாளர் ஐயா அவர்கள்.
தமிழகத்தின்; விவசாய தலைநகரான தஞ்சையில் 1938ல் பிறந்து பட்டம் பல பெற்று அரசுப்பணியில் 1960ல் சேர்ந்து அரசின் விவசாய திட்டங்களும், பயிற்சிகளும் ஏழை விவசாயிகளை அழிப்பதோடு விவசாயிகளின் தாயான மண்ணையும் அழித்து விடும் என்று அரசின் விவசாய கொள்கை மற்றும் திட்டங்களை எதிர்த்து போராடி 3 ஆண்டுகளிலேயே அரசுப்பணியை உதறிவிட்டு வெளிவந்தவர் நமது ஐயா அவர்கள்.
ரசாயண உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளால் மண்ணும் பயிரும் அதில் விளையும் பொருட்களும் எப்படி நஞ்சாக மாறுகிறது என்று ஆராய்ந்து தெரிந்து மக்களுக்கு அதனை பிரச்சாரமும் செய்தார்.
உணவே மருந்தாக வாழ்ந்த தமிழக மக்கள் உண்ணும் உணவே நஞ்சாக மாறிய கொடுமைகளை கண்டு நெஞ்சு நொந்தார் இயற்கை விவசாயம் தான் நம் மண்ணையும், மக்களையும் காக்கும் என்பதை மக்களுக்கு விளக்க யார் அழைத்தாலும் எவ்வித தயக்கமும் இன்றி எளிமையாக சென்று ஆடம்பரமின்றி பணியாற்றினார்.
பூச்சி கொல்லிகள், மரபணு மாற்று விதைகள், மீத்தேன் எரிவாயு எடுத்தல், விளைநிலங்களை மாற்றி பயன்படுத்துதல் போன்ற பலவற்றுக்கு எதிராக போராடிய ஒரு போராளியான ஐயா அவர்களின் கடைசி நாளும் போராடும் நாளாகவே அமைந்துள்ளது.
ஒரு விஞ்ஞானியாக, எழுத்தாளராக, பேச்சாளராக ஒரு போராளியாக பல விவசாய அமைப்புகளை உருவாக்கிய அமைப்பாளராக என பன்முக திறமை கொண்டு அவை அனைத்தையும் அரசால் புறந்தள்ளப்பட்ட நம் விவசாயிகளுக்காக அர்பணித்த ஐயா நம்மாழ்வார் அவர்களின் வாழ்வு ஒரு தியாக வேள்வியாக அமைந்தது.
தமிழக அரசாங்கம் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவு தினத்தை தமிழக இயற்கை விவசாயத்தின் பாதுகாப்பு தினமாக அறிவிப்பதுடன் விவசாய பல்கலை கழகத்தில் ஐயா நம்மாழ்வார் அவர்களின் பெயரில் இயற்கை விவசாய ஆய்வு மையமும் தமிழகத்தின் சிறந்த இயற்கை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ஐயா நம்மாழ்;வார் பெயரில் பதக்கம் பட்டம் பரிசு போன்றவற்றை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
ஈடு செய்ய இயலாத ஐயாவின் இழப்பால் வாடும் அனைவரும் ஐயா அவர்கள் வாழ்ந்த தவ வாழ்வை ஏற்று நம் தமிழக விவசாயிகளுக்காக தொடர்ந்து உழைக்கவும், போராடவும் உறுதிப+ண்டு ஐயா அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக பாரதிய ஜனதா கட்சி ஐயாவின் பாதையில் தொடர்ந்து பணிபுரியும் என உறுதி கூறி ஐயாவின் ஆன்மா நற்கதி அடைய பிரார்த்திக்கிறேன்.
நன்றி ; பொன்.ராதாகிருஷ்ணன்
பாஜக மாநில தலைவர்
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.