பிரதமர்பதவிக்கு நரேந்திர மோடி தகுதியானவர். மோடியை பிரதமராக்குவதென்று முடிவுசெய்த கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பா.ஜ.க மூத்த தலைவர் எல்கே. அத்வானி புகழாரம் சூட்டியுள்ளார்.
தில்லியில் பா.ஜ.க தேசியகவுன்சில் கூட்டத்தில் அத்வானி பேசியதாவது:
இத்தனைபெரிய அளவுக்கு ஆர்வமும், தன்னம்பிக்கையும் காணப்படுவதை நான் பார்த்ததில்லை. மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால், மோடியை பிரதமராக்குவதென்று முடிவுசெய்த கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஐந்து, ஆறுமாதங்களாக பாஜக பிரதமர்பதவி வேட்பாளர் மோடி, தீவிரபிரசாரம் செய்துவருகிறார். இது போன்று வேறு எந்தவொரு அரசியல் கட்சித்தலைவரும் அதிக அளவு பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றது கிடையாது. இதுவரை 77 பிரசாரக்கூட்டங்களில் மோடி பங்கேற்றுள்ளார். விரைவில் 100வது பிரசாரக் கூட்டத்தையும் அவர் நிறைவுசெய்வார்.
பா.ஜ.க ஆளும் குஜராத்தில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இந்தப்பெருமை நரேந்திர மோடியையே சாரும். நர்மதா ஆற்று நீரை, சபர்மதி ஆற்றில்விட்டது மிகப் பெரும் சாதனை. இதற்காக மோடிக்கு எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன்.
2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.க தோல்வியை சந்தித்தது. அதற்கு, அந்ததேர்தலில் நாம் அதீத நம்பிக்கையுடன் போட்டியிட்டது தான் காரணம். எனவே நடைபெறவுள்ள மக்களவைத்தேர்தலை அதீத நம்பிக்கையுடன் எதிர்கொள்ளக்கூடாது.
முஸ்லிம்களிடையே பாஜக குறித்த அவ நம்பிக்கையை காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணிக்கட்சிகளும் ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் இந்தமுறை, 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பா.ஜ.க.,வுக்கு முஸ்லிம்கள் அமோக ஆதரவு அளித்தனர். அதேபோன்று, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களும் பா.ஜ.க.,வை ஆதரித்தனர். வாக்குவங்கி அரசியலுக்காக தாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்ததை தற்போது முஸ்லிம்கள் உணர்ந்துகொண்டு விட்டனர் என்றார் அத்வானி.
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.