நல்லாட்சி என்பது பணக்காரர்களுக்கு மட்டும் சாதகமாக இருப்பது அல்ல. கடந்த 60 ஆண்டுகள் நாட்டை காங்கிரசிடம் ஒப்படைத்ததுபோதும். இனி 60 மாதங்கள் நாட்டை வழிநடத்தும் பொறுப்பை எங்களுக்கு வழங்குங்கள். நல்ல மாற்றத்தை நிச்சயம் கொண்டுவருவோம் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது; பாஜக ஆட்சிக்கு வந்தால் கலவரங்கள் இல்லாத தர்மத்தின் ஆட்சி நடைபெறும். அனைத்துவழிபாட்டு முறைகளும் சமமாக மதிக்கப்படும். பெண்கள் மதிக்கப்படுவார்கள்.
கலாச்சாரம், வேளாண்மை, பெண்கள்நலன், இயற்கைவளங்கள், இளைஞர் நலன், ஜனநாயகத்தை காப்பது, அறிவுத் திறன் மேம்படுத்துதல் ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்தப்படும்.
100 நகரங்கள் அனைத்து வசதிகளும்கொண்ட முன்மாதிரி நகரங்களாக உருவாக்கப்படும்.
அனைத்து மாநிலங்களிலும் ஐஐஎம், ஐஐடி எய்ம்ஸ் ஆகிய உயர் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்.
நாடுமுழுவதும் தொலைதொடர்பை மேம்படுத்த கண்ணாடி இழைகள் பதிக்கப்படும். நதிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கொண்டுவந்த தங்க நாற்கர சாலை திட்டத்தை போல் புல்லட் ரெயில் பாதை அமைக்கும் திட்டம் கொண்டுவரப்படும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி சீராக வைத்து இருப்பதற்காக தனி நிதியம் அமைக்கப்படும்.
கள்ளக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டுகள் அமைக்கப்படும். வெளி நாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு மீட்டு வருவோம்.
விவசாய உற்பத்தி தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டு அதற்கேற்ப ஏற்றுமதி தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். தேசிய விவசாய சந்தை உருவாக்கப்படும்.
மத்திய ஆட்சிக்கு இணையாக மாநில அரசுகளும் நடத்தப்படும். நல்லாட்சி பணக்காரர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்காது. ஏழைகள், தலித்துகள், நலிவடைந்த பிரிவினரின் தேவைகளான பள்ளிகள், மருத்துவமனைகளை உருவாக்கி தருவது தான் நல்லாட்சி. அதை தருவோம். நாம் கூடி வாழ்ந்தால் தான் பலம். அதை உறுதிப்படுத்துவோம். இவையே எனது சிந்தனை.
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.