மாநிலங்களவை தேர்தலுக்கான பாஜக.,வின் வேட்பாளர்கள் அறிவிப்பு

 மாநிலங்களவை தேர்தலுக்கான பாஜக.,வின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடுமுழுவதும் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் அடுத்தமாதம் 7-ம்தேதி நடக்கிறது. இதில் மாநிலங்களில் உள்ள சட்ட மன்ற உறுப்பினர்களின் அடிப்படையில் பா.ஜ.க 13 இடங்களைப்பெறும்.

இந்நிலையில், கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற மத்திய தேர்தல் கமிட்டி கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் சி.பி.தாக்கூர், சத்திய நாராயணன் ஜாட்டியா மற்றும் விஜய்கோயல் உள்ளிட்ட 7 பேர் வேட்பாளர்களாக தேர்வுசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

விஜய் கோயல் ராஜஸ்தானிலும், கட்சியின் துணைத் தலைவரான சி.பி.தாக்கூர் பீகாரிலும், சத்திய நாராயணன் ஜாட்டியா மத்திய பிரதேசத்திலும் போட்டியிடுகின்றனர். மத்திய பிரதேசத்தில் மாநில துணைத் தலைவர் பிரபாத்ஜா, பீகாரில் ஆர்.கே.சிங், ராஜஸ்தானில் ராம்நரைன் துடி, நாராயண் பஞ்சாரியா ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தவேட்பாளர்கள் தவிர, குஜராத், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்கள் குறித்து அந்தந்த மாநில தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் தேர்தல்கமிட்டி ஆலோசனை நடத்திவருகிறது. இன்னும் ஓரிருநாளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...