நாட்டின் வளர்ச்சிக்கு மக்களிடையே ஒற்றுமை அவசியம் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் முஸ்லீம்களின் வர்த்தக கண்காட்சியை நரேந்திர மோடி துவக்கிவைத்தார். பின்னர் பேசியதாவது:- இந்துக்களும் முஸ்லீம்களும் வளர்ச்சியின் இரண்டுசக்கரங்கள் போன்றவர்கள்.நாட்டில் நிலையான வளர்ச்சிக்கு ஒற்றுமை மிக அவசியம். மாநிலத்தின் வளர்ச்சிக்கு எல்லோருடைய பங்களிப்பும் அவசியம்.வளர்ச்சியை வேகமாக கொண்டுவர வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டில் 24 மணிநேர மின்சார வினியோகம் அவசியம்.கடந்த 20 ஆம் ஆண்டுகளாக நம்சமூகத்தில் வளர்ச்சியை காண மூடிகிறது.சிறிய விஷயங்களில் ஏற்படும் மாற்றம் பெரியமாற்றத்துக்கு வழிவகுக்கும்.
முஸ்லீம்கள் பெரிய தொழில்களை கொண்டுள்ளனர். அவர்கள் மிகப் பெரிய வளர்ச்சியை கொண்டு வந்துள்ளனர்.முஸ்லீம் இளைஞர்களும் பெண்களும் மிக பெரும் திறமையை கொண்டுள்ளனர்.ஆனால் அவர்களுக்கு பொருத்தமானதளம் வேண்டும்.வேலையை தேடுவதற்குபதிலாக பிறருக்கு வேலைவாய்ப்பை வழங்ககூடிய நிலைக்கு வர வேண்டும் என்று தெரிவித்தார்.
முஸ்லீம்களின் வணிக நிகழ்ச்சி முதன் முறையாக குஜராத்தில் நடத்தப்பட்டுள்ளது. மூன்றுநாள் நிகழ்ச்சிகளை கொண்ட இதில் நாட்டில் உள்ள 80க்கும் அதிகமான நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. 10 நிறுவனங்கள் துபாயில் இருந்து கலந்துகொள்கின்றது.இந்த கண்காட்சிக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகைபுரிவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.