இ கவர்னன்ஸ் நாட்டில் முழுமைபெற்றால் மக்கள் பிரச்னைகளை விரைவில் தீர்க்கமுடியும் என்றும், இதன் மூலம் வேகமான வளர்ச்சிபணிகள் நடக்கும் என்றும் பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார்..
நாஸ்காம் (தகவல் தொழில் நுட்பதுறை அமைப்பினர் ) , கார்ப்பரேட் நிறுவன அதிபர்களுடன், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாஜக., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மேலும் பேசியதாவது: இன்றைய நிலையில், இளைஞர்களுக்கு பெரியளவில் வாய்ப்பு, அதிகாரம் அளிக்கப்படவேண்டும். அடுத்த 8 ஆண்டுகளில், நாடு தனது வைர விழா சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது,. அதற்குள், நாட்டை முற்றிலும் மாற்றியாக வேண்டும். தகவல் தொழில் நுட்பத்தையும், திறமையையும் ஒருங்கிணைப்பதன் மூலம் நாளையவளமான இந்தியாவை உருவாக்கமுடியும். துரதிர்ஷ்ட வசமாக, இதை செய்யவேண்டிய பொறுப்பில் இருந்த தலைவர்கள், சரியான தீர்வுகளை எடுக்காமல், குழப்பி விட்டனர்.
இ-கவர்னன்ஸ் என்பது, மக்கள் பிரச்னைகளை சுலபமாக தீர்க்க உதவும். விரைவான, வேகமான வளர்ச்சி பாதையில் நாட்டை கொண்டுசெல்ல வேண்டியது அவசியம். நாட்டில் 4 ல் ஒரு பகுதியினர் இந்த தேசத்தில் இன்டர்நெட் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். இன்னும் நாம் எலக்ட்ரானிக்துறையில் மக்களின் சக்தியை அதிகரிக்கவேண்டிய நிலையில் இருக்கிறோம். எலக்ட்ரானிக்துறை தற்போது முக்கிய தேவையாக உள்ளது. சைபர்பாதுகாப்பு பெரும் சவாலாக உள்ளது. இந்தியாவில் இதுதான் புரட்சி ஏற்படுவதற்கான தருணம். இதற்கு கம்ப்யூட்டர் தொழில்நுட்ப துறையினர் துணை நிற்கவேண்டும். கொள்கைகளை சமூக வலைதளங்கள் உருவாக்குகின்றன. இது என்னை மிகவும் கவர்ந்துள்ளது என்று மோடி பேசினார்.
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.