உலகத்திலேயே பெரியசிலையாக குஜராத் மாநிலத்தில் அமைக்கப்படும் சர்தார் வல்லபாய்படேல் சிலைக்கு தமிழகத்தில் இருந்து மண், இரும்பு நேற்று அனுப்பப்பட்டது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே, உலகத்திலேயே பெரியசிலையாக 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய்படேல் சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, நாடுமுழுவதும் உள்ள கிராமங்களில் இருந்து மண்ணையும், அங்குள்ள மக்களிடமிருந்து இரும்பையும் பாஜக.வினர் பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதிலும் கிராமங்கள்தோறும் பெறப்பட்ட மண் மற்றும் இரும்பு ஆகியவை குஜராத் மாநிலத்திற்கு அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள சர்தார் வல்லபாய்படேல் சிலை அருகே நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பாஜக. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசியசெயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். நிகழ்ச்சியில், பாஜக. தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவிடம் தமிழக கிராமங்களில் இருந்து பெறப்பட்ட மண் மற்றும் இரும்பு ஆகியவற்றை மாநிலநிர்வாகிகள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சி குறித்து, பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் நிருபர்களிடம் கூறியதாவது:–
நவபாரத சிற்பியும், ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற 500 சமஸ்தானங்களை ஒன்றிணைத்த வருமான சர்தார் வல்லபாய்படேல் பெயரை போற்றும் வகையில், அவருக்கு குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே 182 மீட்டர் உயரத்தில், உலகத்திலேயே மிகப் பெரிய சிலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, தமிழகம் முழுவதிலும் இருந்து 10,743 கிராமங்களில் இருந்தும், 1406 நகரங்களில் இருந்தும் மண் மற்றும் இரும்புபெறப்பட்டுள்ளன. இந்தபொருட்கள் அனைத்தும் குஜராத் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.