உலக வேலை வாய்ப்பு சந்தையை கைப்பற்றும் வகையில் சீனா மிகப்பெரிய நடவடிக்கை

 உலக வேலை வாய்ப்பு சந்தையை கைப்பற்றும் வகையில் சீனா மிகப்பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் நம் நாட்டு இளைஞர்களை இதில் காண முடியவில்லை என குஜராத் முதல்வரும் பா.ஜ.க பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம், காந்திநகரில், மாநில தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை சார்பில் இளைஞர்களுக்கான பல்வேறு திறன்வளர்ப்பு திட்டங்களை மோடி திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மோடி பேசுகையில், “உலக வேலை வாய்ப்பு சந்தையை கைப்பற்றும் வகையில் சீனா மிகப்பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் நம் நாட்டு இளைஞர்களை இதில் காண முடியவில்லை. நமது இளைஞர்களும் இந்த வேலை வாய்ப்புகளை பெறும்வகையில் நாம் யுக்திகளை வகுக்க வேண்டும்”

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 10 லட்சம் இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என்றும் இதற்காக ரூ.1000 கோடி செலவிடப்படும் என்றும் மத்தியஅரசு கூறியிருந்தது. ஆனால் இதுவரை 18 ஆயிரம் இளைஞர்களுக்கு மட்டுமே இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

வரும்மக்களவை தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சிக்கு வருமானால் இளைஞர்களுக்காக புதியகொள்கை வகுக்கப்படும். இளைஞர்களின் திறன்மேம்பாட்டுத் திட்டங்கள் குஜராத்தில் செயல்படுத்தப் பட்டுள்ளதுபோல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

திறன்வளர்ப்புத் திட்டங்களுக்காக குஜராத் அரசை மத்திய அரசு பாராட்டி விருதுவழங்கியுள்ளது. இதில் குஜராத் காட்டியுள்ள வழியை மற்றமாநிலங்களும் பின்பற்றவேண்டும் மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதி முறைகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளன. வாக்குறுதிகளை நிறைவேற்றாதற்கு மத்திய அரசு இதை ஒருகாரணமாக சொல்லக்கூடும்” என்றார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் சர்வதேச அறிவியல் வ ...

இந்தியாவின் சர்வதேச அறிவியல் விழா இந்திய சர்வதேச அறிவியல் விழா, 2024 நவம்பர் 30 ...

பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு ...

பிரதமரின்  மத்திய மீன்வளர்ப்பு மேப்பாட்டுத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒப்புதல் பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நீர்வாழ் ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலம ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...