3வது அணியில் பிரதமர் கனவில் பலர் மிதக்கின்றனர் , இவர்கள் தேர்தலுக்கு பின்னர் காணாமல் போவார்கள் என்று பீகார் மாநிலம், பூர்ணியாவில் நடந்த தேர்தல்பிரசார கூட்டத்தில் பா.ஜ.க, பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் .
பீகார் மாநிலம் புர்னியாவில் நடந்த பா.ஜ.க பொதுக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியதாவது ; எனக்கு பிரதமர் ஆசை இல்லை , ஆட்சியில் அமரும் எண்ணத்தைவிட நாட்டின் வளர்ச்சியையே முக்கியமாக கருதி வருகிறேன்;
அனைவருக்கும் என் ஹோலி பண்டிகை வாழ்த்துக்கள். ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தேர்தல்தான். இந்ததேர்தலில், வளர்ச்சியின் வண்ணத்தை பார்க்கலாம். ஹோலி பண்டிகையின் போது வீசப்படும் வண்ணங்கள்போல, வளர்ச்சி ஏராளமாக இருக்கும். பீகார், பாட்னா குண்டுவெடிப்பின் போது வீரமாக செயல்பட்ட இந்த மக்களை நான் வணங்குகிறேன்.
மூன்றாவது அணியில் உள்ள அனைத்துகட்சிகளும், காங்கிரசுடன் தொடர்பு வைத்துள்ளன. பிரதமர் ஆகவேண்டும் என்று விரும்புவோர் அந்த அணியில் ஏராளமாக உள்ளனர். அவர்களில்பலர் முன்னாள் பிரதமர்கள். பலர் பிரதமர் ஆகவேண்டும் என எண்ணுபவர்கள். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட போதும், உ.பி.,யில் கலவரம் ஏற்பட்டபோதும் இந்த மூன்றாவது அணி தலைவர்கள் எங்குபோனார்கள். இந்துக்களும், முஸ்லிம்களும் மோதிக்கொண்ட சூழ்நிலையில், இந்த தலைவர்கள் என்னசெய்து கொண்டிருந்தார்கள். நாடு பல இன்னல்களை சந்தித்தபோது இவர்கள் எங்கே போனார்கள்? தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன், இவர்கள் தோன்றிவிடுவார்கள்.
ஊழல் புகாரில் பலர் : பாஜக., ஒரு அரசை அமைக்கமட்டும் விரும்பவில்லை, ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் ஆகியவற்றை கொண்டு வர விரும்புகிறது. தேசிய முற்போக்குகூட்டணி மட்டுமே அதை செய்யமுடியும். எதிர்முகாமில் உள்ள கூட்டணி தலைவர்கள் பலர் ஊழல்புகாரில் சிக்கியவர்கள். பிரதமர் கனவிலிருந்த நிதிஷ்குமாருக்கு அது கிடைக்காது என்று தெரிந்தவுடன், பாஜக., கூட்டணியில் இருந்து விலகிக்கொண்டார். பீகார் மக்கள் இந்த ஆட்சியை விரும்ப வில்லை. பீகாரில் 90 பள்ளிகள் இருப்பதாக அறிக்கையில் கூறப்படுகிறது. ஆனால், ஒன்றுகூட துவக்கப்படவில்லை. அப்படி என்றால் அந்தபணம் எல்லாம் எங்கேபோனது?
காங்கிரஸ் கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று விட்டால், தங்கள் நிலை என்ன என்பது குறித்து பீகாரில் உள்ள கால்நடைகள்கூட கவலைப்படுகின்றன. பீகார் பயங்கரவாதம் இல்லாத, அமைதியான ஒருமாநிலமாக மாறவேண்டும். ஆனால் ஓட்டுவங்கிக்காக இந்த அரசு அதை செய்யமறுக்கிறது.
ராகுல் அவர்களே அனைவருக்கும் மொபைல்போன் கொடுத்துள்ளதாக கூறுகிறீர்கள்? அதற்கு சார்ஜ்செய்ய மின்சாரம் கொடுத்தீர்களா ? நாடுமுழுவதும் காட்டுத் தர்பார் ஆட்சி தான் நடக்கிறது. நாங்கள் ஆட்சிக் கட்டிலை மட்டும் விரும்பவில்லை. நாட்டின்வளர்ச்சியை காணத் தான் ஆசைப்படுகிறோம். இவ்வாறு மோடி பேசினார்.
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.