எதிர்வரும் தேர்தலில் தங்கள் தோல்வி உறுதி என்பதை உணர்ந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் அதற்கான காரணங்களை இப்போதே தேடத்தொடங்கி விட்டனர் என்று பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி விமர்சித்துள்ளார்.
ஒடிஸா மாநிலத்தில் இரண்டாம்கட்ட பிரசாரத்தை மேற்கொண்ட நரேந்திர மோடி, சம்பல்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது:
லண்டன் கருத்தரங்கிற்கு, சல்மான்குர்ஷித் எந்த நாட்டின் பிரதிநிதியாக சென்றார் என்பதை அறியவிரும்புகிறேன். தேர்தல் ஆணையம் மீது குறைகூறவே அவர் பிரிட்டன்சென்றார். அதன் நற்பெயரை அவர் சிதைத்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் மீதும் அவர் தாக்குதல் தொடுத்துள்ளார்.
இந்தியாவின் மதிப்புவாய்ந்த இந்த இரு அமைப்புகளின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது ஆளும் காங்கிரஸ்சின் வழக்கமாக இருந்துவருகிறது. இந்த விவகாரத்தைக் கவனிக்கவேண்டிய பொறுப்பு பிரதமருக்கு உள்ளது. தற்போது தங்கள் தோல்விக்கான காரணத்தைத்தேடும் பணியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நான், இந்திய பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பதற்காக 24 மணிநேரமும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். காங்கிரஸ் தலைவர்களோ “மோடி’ என்ற பிரச்னைக்குத் தீர்வுகாண உழைத்து கொண்டிருக்கின்றனர்.
பாஜக ஆட்சிசெய்யும் மாநிலங்களுக்கு உதவுவதில் மத்திய அரசு அலட்சியம்காட்டி வருகிறது. அதில் அதிகம் பாதிப்படைந்துள்ளவை மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களாகும்.
மத்தியப் பிரதேசத்தில் சூறாவளி மற்றும் கனமழையால் விவசாயம் அழிந்த போதும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ராகுல்காந்தி எதுவும் செய்யவில்லை. விவசாயிகளை பற்றி பிரதமர் கவலைப்படுவதில்லை. அவர்கள் நமக்கு வாக்களிக்கவில்லை. எனவே, இறந்து போனால் போகட்டும் என்று நினைக்கின்றனர்.
காங்கிரஸின் 60 ஆண்டுகால ஆட்சியில் மக்களின் பசியைப்பற்றி அவர்கள் உணரவில்லை. விலைவாசி மற்றும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.
இங்குள்ள செயல் திறனற்ற ஒடிஸா மாநில அரசுக்கு மக்கள் அறுதிப்பெரும்பான்மை அளித்தார்கள். அப்படி இருந்தும் இந்த அரசு என்னென்ன வளர்ச்சிப்பணிகளைச் செய்தது? முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் மக்கள் எதையும் எதிர்பார்க்க வேண்டாம்.
மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் உறங்கி கொண்டிருக்கும் அரசைத் தட்டியெழுப்ப வேண்டும் என்றார் நரேந்திரமோடி.
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.