நான் குற்றவாளி என்று எந்த நீதிமன்றமும் கூறவில்லை

 கடந்த 2002 குஜராத் கலவரத்துக்காக வருத்தப்படுகிறேன், ஆனால் குற்றஉணர்வு இல்லை. நான் குற்றவாளி என்று எந்த நீதிமன்றமும் கூறவில்லை என தனது வாழ்க்கை வரலாறு நூலில் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் எழுத்தாளரும் டிவி. நிகழ்ச்சி தயாரிப்பாளருமான ஆண்டிமெரினோ, பா.ஜ.க பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து நூல் வெளியிட்டிருக்கிறார்

அந்த புத்தகத்தில் நரேந்திரமோடி தனது மனம் திறந்து கூறியிருப்பதாவது: 2002 குஜராத் கலவரத்துக்காக வருத்தப்படுகிறேன். ஆனால் குற்ற உணர்வால் பாதிக்கப்படவில்லை. நான் குற்றவாளி என்று எந்த நீதி மன்றமும் கூறவில்லை.

கலவரத்துக்கு ஒரு மாதத்துக்குப் பின்பு 2002 ஏப்ரல் 12-ம் தேதி பனாஜியில் பா.ஜ.க தேசியசெயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதல்வர் பதவியை ராஜினாமாசெய்ய விரும்புவதாகத் தெரிவித்தேன்.

ஆனால் கட்சித் தலைமை எனது ராஜினாமாவை விரும்பவில்லை. அதேபோல் என்னை விட்டுவிலக மாநில மக்களும் விரும்பவில்லை.

2002 பிப்ரவரி 27ம் தேதி 59 கரசேவகர்கள் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். அந்நாளில் கோத்ராவில் இருந்து காந்தி நகருக்கு இரவில் திரும்பினேன். ராணுவத்தை தயார்நிலையில் இருக்க செய்யுமாறு எனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.

ஆனால் நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டநேரம் என்பதால் பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவியது. அதனால் ராணுவ வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டிருந்தனர். எனவே அண்டைமாநில முதல்வர்களின் உதவியை நாடினேன். ராஜஸ்தான், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து 10 கம்பெனி போலீஸ் படையை அனுப்ப கேட்டுக்கொண்டேன்.

மகாராஷ்டிர அரசுமட்டும் பெயரளவுக்கு சிறிய போலீஸ்படையை அனுப்பியது. மற்ற 2 மாநில அரசுகளும் எனது கோரிக்கையை நிராகரித்துவிட்டன.

என்னை பொறுத்த வரை வளர்ச்சிதான் தாரகமந்திரம். மக்களை முன்னேற்றவேண்டும் என்பதே எனது அரசின் பிரதானநோக்கம். என்றார் நரேந்திர மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலம ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...