நடப்பு 2014ம் வருடம் தாமரையின் வருடம், பா.ஜ.க.,வின் வருடம் என கூறினார் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
உ.பி.,மாநிலம் பக்பத் நகரில் சனிக்கிழமை காலை நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது.
பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் 1857ல் நடைபெற்ற .முதல்சுதந்திர யுத்தம் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்ட மோடி, சுயராஜ்யத்துக்காக அன்று போராடினார்கள். பிரிட்டிஷார் கைகளில் இருந்து நாட்டைக்காக்க போராட்டம் நடத்தினார்கள். இன்று மக்கள்சுராஜ் – அதாவது நல்ல ஆட்சிக்காக போராட வேண்டியுள்ளது. காங்கிரஸிடம் இருந்து நாட்டைகாக்க போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சி இது வரை விவசாயிகளுக்கும் இராணுவத்தினருக்கும் எதுவும் சொல்லும்படியாகச் செய்யவில்லை . இங்கே நம்மை காப்பவர்களைக் காக்க எதுவும் செய்ய வில்லை. அவர்களின் தலைவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் தூக்கிக்கொண்டு போகிறார்கள், இங்கே இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது, பாகிஸ்தான் பிரதமர் இங்கே வந்து விருந்துண்கிறார். இங்கே பயணம் மேற்கொள்ள இது சரியானசந்தர்ப்பம் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமரிடம் தெரிவிக்க ஏன் நம் பிரதமருக்கு அன்று தோன்றவில்லை என்று கேள்வி எழுப்பினார் மோடி.
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.