காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி ஒரு குடும்ப சொத்தாக மாறிவிட்டது என்று பாஜக மூத்த தலைவர் எல் கே. அத்வானி குற்றம்சாட்டி உள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது சுதந்திர போராட்ட கால கட்டத்தில் காங்கிரஸ் கட்சின் தலைவர் பதவிக்கு ஒருவர் ஒரு-முறை மட்டுமே தேர்ந்தெடுக்கபட்டார். சொல்ல போனால் அந்த கால கட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ஒவ்வொரு ஆண்டும் ஒவ்ஒருவர் இருந்துள்ளார்.
ஆனால் இன்றைய நிலையை பாருங்கள், எப்படி மாறிவிட்டது . காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி என்பது ஒரு குடும்ப சொத்து போன்று பாவிக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கட்சி தலைவராகவே இருக்கும் நிலை உருவாகியுள்ளது . காங்கிரஸ்சில் மகாத்மா காந்திக்கு எவ்வளவு பெரிய செல்வாக்கு இருந்தது என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம். காங்கிரஸ் கட்சியுடன் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்ட மகாத்மா காந்தி கூட 1924ம் ஆண்டில் ஒரே ஒருமுறைதான் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்துள்ளார் . ஆனால் சோனியாகாந்தி இப்போது 4வது முறையாக காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்
மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி காலம் மூன்று ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கபட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1980-ம் ஆண்டில் ஜனதா கட்சியின் ஆட்சி எப்படி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்ததோ அதை போன்றதொரு மோசமான நிலையை ஐக்கிய-முற்போக்கு கூட்டணி சந்தித்து வருகிறது என்று அத்வானி கூறியுள்ளார்.
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.