முல்லைபெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு நீரைதேக்கி வைக்கலாம்

 முல்லைபெரியாறு அணையில் 142 அடி அளவுக்கு நீரைதேக்கி வைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மேலும் கேரளா கூறிவருவதுபோல முல்லை பெரியாறு அணை பல வீனமாக இல்லை. பலமாகவே உள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சிய அடைந்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீர்மட்டம் அளவுக்கு நீர்தேக்கி வைக்கப்பட்டு வந்தது. பின்னர் அணை பலவீனமாக உள்ளது என்று கேரளா அணையின் நீர் தேக்கிவைக்கும் அளவை 136 அடியாகக் குறைத்தது. ஆனால் தமிழகமோ 142 அடியாக நீர்தேக்கும் அளவை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து கேரளா நிராகரித்ததால் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குதொடர்ந்தது. இந்த வழக்கில் 2006ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி , அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும், அணையை வலுப்படுத்தும் பணிகளை முடித்தபிறகு, முழுக்கொள்ளளவான 152 அடிக்கும் உயர்த்திக் கொள்ளவும் அனுமதி அளித்தது.

ஆனால் இதை நிராகரித்த கேரளா, 2006, மார்ச் 18ந் தேதியன்று கேரளா சட்ட சபையில் அணை பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது. முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருப்பதால் இந்த சட்டத்தின் படி நீர் தேக்கும் அளவை உயர்த்த முடியாது என்று கூறியது கேரளா. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இதைவிசாரித்த உச்ச நீதிமன்றம் அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிக்க 2010 பிப்ரவரி 18 ந் தேதி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது.

பல்வேறு கட்ட ஆய்வுக்குப்பிறகு, 2012 ஏப்ரல் 25ந்தேதி முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானதாக உள்ளதாகவும், சமீபத்தில் ஏற்பட்ட நில அதிர்வுகளால்கூட அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் ஆனந்த்குழு அறிக்கை அளித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ந் தேதி இந்தவழக்கில் தலைமை நீதிபதி லோதா, நீதிபதிகள் சந்திர மெளலி, கே.ஆர். பிரசாத், டட்டூ, இக்பால், மதன் பி லோகூர் ஆகியோர் நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இறுதிவிசாரணை முடிவடைந்து தீர்ப்பும் ஒத்திவைக்கப்பட்டது.

நேற்று முல்லைப் பெரியாறு அணை வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அணையின் நீர்தேக்க அளவை தற்போதைய 136 அடியில் இருந்து 142 அடிக்கு உயர்த்தலாம் என்று கூறியுள்ளது. அத்துடன் முல்லைப்பெரியாறு அணை பலமாகவே இருக்கிறது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் கேரளாவின் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு சட்டம் செல்லாது என்றும் புதிய அணை கட்டவும் தடைவிதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அதேபோல் அணையின் பாதுகாப்புக்கான குழு ஒன்றையும் உச்சநீதிமன்றம் அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...