நிலம் கையகப்படுத்துதல் அல்லது நில எடுப்பு மசோதாவானது இந்த பாராளுமன்ற தொடரில் நிறைவேறியது தொடர்பாக காங்கிரஸ் கட்சியும் அதன் துணைத்தலைவர் ராகுல் காந்தி அவர்களும் இந்த மசோதாவை தாங்கள் தான் இந்த நாட்டிற்கு அர்ப்பணித்ததை போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளனர்.
தனி நபர் மசோதாக்கள் என்பது பாராளுமன்ற நிகழ்வுகளில் முக்கியமான ஒன்றாகும். கட்சிக்கு அப்பாற்ப்பட்டு, சில உறுப்பினர்கள் மிகவும் நல்ல, அவசியமான மசோதாக்களை அறிமுகம் செய்தால் அதை ஆராய்ந்து அரசு ஏற்று கொண்டு, மசோதாக்களை நிறைவேற்ற ஆவன செய்ய முன் வரும். இந்த முறையில் கொண்டு வரப்பட்டது தான் மேலே குறிப்பிட்டுள்ள நில கையகப்படுத்துதல் மசோதா.
இந்திய நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பேருதவியாக அமைந்த இந்த மசோதாவை கொண்டு வந்தது பாஜகவின் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் என்ற மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர். 14வது மற்றும் 15வது பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகித்தவர் இவர்.
விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை முறைபடுத்தும் மசோதா Agricultural Land Acquisition Regulatory Authority Bill, 2007. என்கின்ற மசோதாவை 2007 செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியும், காங்கிரஸ் அரசு அதை கண்டு கொள்ளவில்லை. மனம் தளராத அவர் மறுபடியும் ஜூன் 2009ல் கொண்டு வந்தார். நான்கு வருடங்களுக்கும் மேலாக இதை கிடப்பில் போட்டிருந்த காங்கிரஸ் அரசு ஆகஸ்ட் 2013ல் பாஜகவின் ஆதரவுடன் இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
ஆக, பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினரின் பெருமுயற்சியால் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவை தன்னுடையதாக சொந்தம் கொண்டாடும் காங்கிரஸ் கட்சியின் சந்தர்ப்பவாதத்தை நாம் கண்டிக்க வேண்டிய இந்த வேளையில், அந்த கட்சியின் கேவலமான நடத்தையை மக்கள் கண்டு கொள்ள வேண்டும்.
மேலும் இந்த மசோதாவை கொண்டு வந்து இந்த நாட்டு மக்களின் வாழ்வில் விளக்கேற்றிய நம் கட்சியை சேர்ந்த இந்த பாராளுமன்ற உறுப்பினர் தான் 'நிலக்கரி ஊழலை' அம்பலப்படுத்தியவர்.14வது பாராளுமன்றத்தின் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி இவரை பாராளுமன்ற உறுப்பினர்களிடையே "முன் மாதிரி" (Role Model) என்று புகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 15வது பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 372 தனி நபர் மசோதாக்களில் 31 மசோதாக்களை இவர் மட்டுமே கொண்டுவந்தது சிறப்பு. Prime Point Foundation ஹன்ஸ்ராஜ் அஹிர் அவர்களை 15வது பாராளுமன்றத்தின் சிறந்த உறுப்பினராக தேர்ந்தெடுத்து சன்சாத் ரத்னா விருது வழங்கி கவுரவித்துள்ளது.
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.