அராஜகத்துக்கு துணை போன மார்க்சிஸ்ட்க்கு, குஜராத்தை ,விமர்சனம் செய்ய அருகதை உள்ளதா?

 பாஜகவினரை மத வாதிகள் என்றும், குஜராத் கலவரத்திற்கு தொடர்பு இல்லை என்று பலமுறை நீதி மன்றங்கள் தீர்ப்புகள் கூறியும் நரேந்திர மோடி அவர்களை, தொடர்பு படுத்தி பேசியும், இஸ்லாமியர்கள் பயத்தில் வாழ்கிறார்கள் என்று நாகூசாமல் பேசும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் யோக்கியதை இது தான்.

முப்பத்து நான்கு ஆண்டுகள் மேற்கு வங்காளத்தை ஆண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த மாநிலத்தை வன்முறை மற்றும், கோரமான தன் கூலிபடைகளை கொண்டு அடக்கு முறையாலே ஆண்டு கொண்டிருந்தது. சீனாவில் கூட இப்படிப்பட்ட அடக்கு முறை இருந்திருக்குமா என்று சந்தேகமே.1964ல் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், 1967ல் ஐக்கிய முன்னணி என்கின்ற கூட்டணியில் இனைந்து காங்கிரஸ் கட்சியை தோற்கடித்தனர்.

அதன் பிறகு அந்த ஆட்சி கலைக்கப்பட்டு மறுபடியும் 1969ம் ஆண்டு அரசு அமைத்தனர். சரியான வழியில் நடந்தால் ஆட்சி அதிகாரம் கிடைக்காது என்றெண்ணிய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்ற பின்னணி கொண்ட மற்றும் சிகப்பு அறிவு ஜீவிகள் கொண்ட இரு ரகசிய பிரிவுகளை அமைத்து 34 ஆண்டுகள் ஒவ்வொரு தேர்தலிகளிலும் குற்ற பின்னணி கொண்ட பிரிவை வைத்து கொண்டு வன்முறையை கையாண்டு ஆட்சியை பிடித்ததும், சிகப்பு அறிவு ஜீவிகள் பிரிவை சார்ந்தவர்களை அரசு துறைகள் மற்றும் கல்வி துறைகளில் நிரப்பி தங்கள் ஆட்சியை அதிகாரத்தை அடக்கு முறையால் பலபடுத்தி கொண்டது.

தங்களை எதிர்பதற்கு ஆளே இல்லமால் செய்தது. தற்போது ஊடகங்களை குறை கூறும் இந்த கட்சி, கணசக்தி என்ற பெயரில் ஒரு தின இதழையும், சௌபிஸ் கண்டா (24 மணி நேரம்), ஆகாஷ் பங்களா என்கின்ற இரு தொலை காட்சி சேனல்களையும் துவக்கி அதன் மூலம் பல பொய்களை பரப்பியது. சைன்-பாரி கொலைகள்-1970, மாறிச்-ஜான்பி படுகொலைகள்-1977, ஆனந்த மார்க் படுகொலைகள்-1982,கேஷ்பூர் வன்முறை-2000,நானுர் படுகொலைகள்-2000, சோட்டா அன்காரியா அழிவு-2001, சிங்கூர் கலவரம்-, தபாசி மாலிக் கற்பழிப்பு-2006, நந்திகிராம் இனபடுகொலை-2007, மங்கள்கோட் படுகொலைகள்-2009, நேதாய் துப்பாக்கி சூடு 2010 போன்ற பல சம்பவங்கள் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசில் நடந்துள்ளது.

இப்படிப்பட்ட அராஜக செயல்களுக்கு துணை போன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, அமைதி பூங்காவான குஜராத்தை பற்றியும்,விமர்சனம் செய்வதற்கு அருகதை உள்ளதா? நரேந்திர மோடியின் ஆட்சியை பற்றியும் குறை கூறுவதற்கு அந்த மக்களால் தூக்கி எறியப்பட்டது. இனி அந்த கட்சியால் மறுபடியும் அதிகாரத்திற்கு வர முடியுமா? இதற்கு மாற்றாக வந்த மம்தா பானர்ஜி சரியாக ஆட்சி செய்யாததால், மக்கள் வெறுத்து போயுள்ளார்கள். இதற்கு மாற்று பாஜக தான் என்பதில் ஐயம் இல்லை. இந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரச்சாரம் மேற்கு வங்காளத்தில் சிறப்பாக இருந்தது என்று சொல்லப்படுகிறது. மாற்றம் வருமா? காலம் பதில் சொல்லும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...