லோக் சபா தேர்தலில் வீசிய மோடி சுனாமி பேரலையில் பாஜக ஆட்சி அமைக்கத் தேவையான எண்ணிக்கையைவிட கூடுதல் தொகுதிகளை பெற்று அரியணை ஏற்கிறது. நாட்டின் 16வது பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்க இருக்கிறார்.
பாஜக மட்டும் 283 இடங்களை கைப்பற்றியுள்ளது. அடுத்த இடத்தில் மாநிலக்கட்சிகள் 147 இடங்களை பிடித்தன. காங்கிரஸ் கட்சியோ வெறும் 45 இடங்களைத் தான் கைப்பற்றியது.
ஆட்சியமைக்க தேவையான 272 இடங்களைவிட மிகஅதிகமான எண்ணிக்கையில் பா.ஜ.க வென்றுள்ளதால் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. 1984ஆம் ஆண்டுக்கு பின்னர் தனிப்பெரும்பான்மை பெற்றகட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.
நரேந்திர மோடி போட்டியிட்ட குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி ஆகிய இரு தொகுதிகளிலுமே அபார வெற்றிபெற்றுள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த மொரார்ஜி தேசாய் 1977ஆம் ஆண்டு நாட்டின் பிரதமரானார். தற்போது குஜராத்தை சேர்ந்த நரேந்திரமோடி பிரதமராகிறார்.வரும் 21ந் தேதி நாட்டின் 16வது பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்கிறார்.
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.