என்னுடைய அரசு எல்லாமக்களுக்கும் உரிய அரசாக இருக்கும்

 குஜராத்தில் வதோதராவில் நான் 50 நிமிடமே செலவழித்தேன் ஆனால் மக்கள் என்னை 5 லட்சத்துகும் அதிகமான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்துள்ளீர்கள், எனது சகோதர, சகோதரிகளுக்கு நான் மன மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நரேந்திர மோடி வதோதராவில் பேசுகையில் குறிப்பிட்டுள்ளார்.

நரேந்திரமோடி, மேலும் பேசியதாவது: மீடியாக்கள் என்னை முன் கூட்டியே பேசவேண்டும் என்று கேட்டுக் கொண்டன. ஆனால், எனது முதல்பேச்சு வதோதராவில்தான் இருக்க வேண்டும் என்று இங்கு வந்துள்ளேன். இங்கிருந்தபடி நான் நாட்டுமக்கள் அனைவருக்கும் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

நல்லகாலம் பிறந்து விட்டது. இங்குள்ள ஒவ்வொருவருக்கும் நான் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். என்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்தபின்னர், நான் மொத்தமே 50 நிமிடங்கள்தான் வதோதராவில் இருந்தேன். ஆனால், நீங்கள் எனக்கு 5,70,000 ஓட்டுக்களை அளித்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றிகலந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். குஜராத்தில் மொத்தம் 26 தொகுதிகளில் 25 தொகுதிகளை பாஜக.,வுக்கு வெற்றியை அளித்துள்ளீர்கள். தே.ஜ.,கூட்டணிக்கு 300 க்கும் மேற்பட்ட தொகுதிகள் வெற்றிபெற்று முச்சத வெற்றி சாதனையை தே.ஜ., கூட்டணி பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் பெருவாரியான ஓட்டுக்கள் பதிவுசெய்தது தேர்தல் கமிஷனின் வெற்றியாகும். பனாரஸ் தொகுதியில் வெற்றி , மோடியின் அமைதிக்கு கிடைத்த பரிசு. நீங்கள் புதிய இந்தியாவை உருவாக் கிட ஓட்டளித்துள்ளீர்கள். இது போற்றக்கூடிய மாபெரும்வெற்றி. ஒவ்வொரு ஓட்டும் இந்த நரேந்திரமோடியை உருவாக்கி இருக்கிறது. வலுவான எண்ணம்கொண்ட தேசிய கட்சிக்கு மக்கள் அளித்த தீர்ப்பு இது.

சுதந்திரம்பெற்ற காலம் முதல் இதுபோன்று அபாரவெற்றி காங்கிரஸ் இல்லாத அணிக்கு யாருக்கும் கிடைக்கவில்லை. இளைஞர்கள் இந்தியாவின் தலை விதியை நிர்ணயிக்க இருக்கின்றனர். இந்தியா வாழுவதற்குரிய காலம். சாவதற்கு அல்ல. சுதந்திரம் அடைந்த காலத்திற்குபின்னர் பிறந்த ஒருவரால் இந்தநாடு வழி நடத்தி செல்லப்படவிருக்கிறது.

குஜராத்தில் 13 ஆண்டுகளாக முதல்வராக இருந்த நான் இதுவரை ஒரு நாள்கூட ஓய்வு எடுக்கவில்லை. இந்த தருணத்தில் இந்தியாவை முன்னேற்றபாதைக்கு நாம் அழைத்து செல்வோம். கோடிக்கணக்கான மக்களின் கனவை நிறைவேற்றுவோம். தேர்தல்முடிந்தது- நாட்டு வளர்ச்சிக்காக உழைப்போம். என்னுடைய அரசு எல்லாமக்களுக்கும் உரிய அரசாக இருக்கும். எதிர் கட்சியினருடன் சேர்ந்து நாட்டின் வளர்ச்சிக்காக செயல்படுவேன். என்று மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...