புதிதாக அமைய உள்ள மத்திய அமைச்சரவை குறித்து நரேந்திர மோடி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் விழா நாளை மறுதினம் மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அமைச்சரவை பட்டியல் இன்னும் இறுதி படுத்தப்படவில்லை. இதுகுறித்து பிஜேபி தலைவர்களுடன் நரேந்திரமோடி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
அமைச்சரவையில் இடம் கேட்டு வராதீர்கள், கட்சிப்பணியில் ஆர்வம் காட்டுங்கள் என்று பிஜேபி எம்பிக்களுக்கு நரேந்திரமோடி ஏற்கனவே ஆலோசனை கூறியிருக்கிறார் .
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு வருமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன்,சல்மான்கான், பாடகி லதா மங்கேஷ்கர் உள்ளிட்ட திரைப்பட துறையினருக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.
மே 26-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற இருக்கும் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு சுமார் 2500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இப்போதைய மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் இந்த 777 உறுப்பினர்களும் தங்களது மனைவிகளை அழைத்து வர முடியாது. முன்னாள் ஜனாதிபதிகள் பிரதீபா பாட்டீல், அப்துல் கலாம் ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். பதவி விலகும் பிரதமர் மன்மோகன் சிங் தனது அமைச்சரவை சகாக்களுடன் கலந்து கொள்வார். நரேந்திர மோடியின் தாயார் ஹிராபன் மற்றும் அவரது 3 சகோதரர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தில் இருந்து பிஜேபி தலைவர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று தெரிகிறது.
பிஜேபி தரப்பில் மட்டும் 1250 பேர் வரக்கூடும் என்று ஜனாதிபதி மாளிகை வட்டாரம் தெரிவிக்கிறது. முதல் முறையாக சார்க் நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனது வருகையை இன்று உறுதிப்படுத்தி விட்டார். பிற நாடுகளின் தலைவர்களும் விழாவில் பங்கேற்பதில் ஆர்வமாக உள்ளனர். 6 சார்க் நாடுகளின் தலைவர்களையும் விழா முடிந்ததும் நரேந்திர மோடி தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார்.
வழக்கமாக அமைச்சரவை பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையின் அசோகா மண்டபத்தில்தான் நடைபெறும். இந்த தடவை ஜனாதிபதி மாளிகையின் முன்புற முற்றத்தில் விழா நடை பெறுகிறது. இதற்கு முன் 1990-ல் சந்திர சேகரும், 1998-ல் வாஜ்பாயும் இதேபோல் ஜனாதிபதி மாளிகையின் முற்றத்தில் பதவியேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பதவியேற்பு விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.