தேர்தலில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததை தொடர்ந்து பாராளுமன்றத்தில் எம்பி.க்கள் உட்காரும் இடவரிசையும் மாறியது.
16–வது பாராளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. தேர்தலில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மை பெற்றதால் அக்கட்சியின் எம்.பி.க்கள் எதிர்க் கட்சி வரிசையில் இருந்து ஆளும் கட்சி வரிசைக்கு வந்து விட்டனர். 1984–ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ஒருகட்சி (பா.ஜ.க) தனித்து பெரும்பான்மை பெற்றிருப்பதால் ஆளும்கட்சி வரிசை நிறைந்து வழிந்தது. கட்சிகளின் எம்.பி.க்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கு வரிசை மற்றும் இருக்கைகளும் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன.
அதன்படி, பா.ஜ.க.,வின் மூத்த தலைவரான அத்வானிக்கு பாராளுமன்ற பா.ஜ.க தலைவரான (பிரதமர்) நரேந்திர மோடிக்கு அடுத்த இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அடுத்ததாக அதேமுதல் வரிசையில் முரளி மனோகர்ஜோஷி, ராம்விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி தலைவர்), வெங்கையா நாயுடு, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத்சிங் ஆகிய 5 முக்கிய தலைவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பா.ஜ.க.,வின் முன்னாள் தலைவர் நிதின்கட்காரி ஆளும் கட்சிக்குரிய பகுதியில் 2–வது வரிசையிலும், வருண் காந்தி பின்வரிசையிலும் இடம்பிடித்து இருந்தனர்.
எதிர்க்கட்சியினருக்கான ஒதுக்கீட்டின் படி, முதல் வரிசையில் பாராளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வீரப்ப மொய்லி, கே.எச்.முனியப்பா ஆகியோர் அமர்ந்து இருந்ததை காணமுடிந்தது. இவர்களுக்கு பின்னால் 9–வது வரிசையில் ராகுல்காந்தி உட்கார்ந்து இருந்தார்.
எதிர்க்கட்சி தரப்பின் முன்வரிசையில், முலாயம்சிங் (சமாஜ்வாடி), சுதீப் பந்தோபாத்யா (திரிணாமுல் காங்கிரஸ்), அர்ஜூன் சரண்சேத்தி (பிஜூ ஜனதா தளம்), தம்பிதுரை (அ.தி.மு.க.) ஆகியோருக்கும் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.