பிராந்திய ஒத்துழைப்பில் பிரதமர் நரேந்திரமோடி அதிக ஆர்வம் காட்டுகிறார் என பாகிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி ஜேம்ஸ் டாப் பின்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நரேந்திர மோடி தனது பதவியேற்பு விழாவில் ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப் ஆகியோர் பங்கேற்க அழைப்புவிடுத்தது பிராந்திய ஒத்துழைப்புக்கு அவர் முக்கியத்துவம் அளிப்பதை உணர்த்துகிறது.
ஆப்கானிஸ்தான் ஸ்திரத்தன்மையோடு இருந்தால் தான் அண்டை நாடுகள் பாதுகாப்பாக இருக்கமுடியும். அதன் காரணமாகவே அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் அதிபர் ஹமீதுகர்சாய் கையெழுத்திட தாமதம் செய்தபோது சீனா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்கள் கர்சாயை தொடர்புகொண்டு ஒப்பந்தத்தை இறுதிசெய்ய வலியுறுத்தினர்.
ஆப்கானிஸ்தானில் மேலும் சில ஆண்டுகள் அமெரிக்கபடைகள் தங்கியிருக்க ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக ஆப்கானிஸ்தான் மாறி விடக்கூடாது என்று பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் அச்சம்தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தான் வழியாக தங்கள் நாட்டுக்குள் போதைப்பொருள் கடத்தப்பட வாய்ப்பிருப்பதாக ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது என்றார்.
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.