பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசிடம் தொடக்கத்திலேயே அதிசயங்களை மக்கள் எதிர்பார்க்கவேண்டாம் என கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
கோவா தலை நகர் பனாஜியில் நடந்த நிகழ்ச்சியில் மனோகர் பாரிக்கர் பேசியதாவது: மத்தியில் புதிய ஆட்சி அமைந்ததும் நல்லநாள்கள் வந்திருக்கவேண்டும். அவை வந்து விட்டனவா? என்று மக்கள் பலரும் கேட்கிறார்கள். அதற்கு நான் “நல்ல நாள்கள் இன்னும் வரவில்லை. விரைவில்வரும்’ என்று பதிலளித்தேன்.
முந்தைய மத்திய அரசு வேறு சிந்தனைகளை கொண்டிருந்ததுடன் அவர்கள் சில கட்டுப் பாடுகளையும் விதித்தனர். ஆனால் தற்போதைய மத்திய அரசும், கோவா அரசும் ஒரேசிந்தனையைக் கொண்டுள்ளன. இதனால் இரு அரசுகளும் இணைந்து செயல்படமுடியும்.
மோடி ஒருமுறை கோவா வந்தபோது “எந்த பிரச்னைகளை வலியுறுத்த விரும்புகிறீர்கள்?’ என்று என்னிடம் கேட்டார். அப்போது நான், மண்டோவி ஆற்றுப்பாலம் குறித்து வலியுறுத்தினேன்.
கோவா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை மோடியிடம் நான் வலியுறுத்தவில்லை. இதனால் ஊடகங்கள் என்னை கடுமையாக விமர்சித்தன. இன்னும் 4-5 மாதங்களில் கோவா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுவிடும். அதற்குள் புதிய மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்த நான் விரும்பவில்லை என்று மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.