ஷரியத் சட்டம், ஃபத்வா போன்றவற்றுக்கு சட்டஅங்கீகாரம் எதுவும் இல்லை

 ‘ஷரியத் சட்டம், ஃபத்வா போன்றவற்றுக்கு சட்டஅங்கீகாரம் எதுவும் இல்லை. அந்த உத்தரவுகளுக்கு அடிபணிய வேண்டியதில்லை’ என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் விஸ்வ லோச்சன் மதன் என்பவர் தாக்கல்செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

அகில இந்திய முஸ்லிம் தனியுரிமை சட்ட வாரியத்தின் கீழ் உலமாக்கள் எனப்படும் முஸ்லிம் அறிஞர்கள் சபை இயங்கிவருகிறது. இது, இஸ்லாமிய புனிதச்சட்டத்தை பின்பற்றுவதாக கூறிக்கொண்டு நாடு முழுவதும் போட்டி நீதிமன்றங்களை நடத்திவருகிறது.

தார்-உல்-காஸா, நிஸாம்-இ-காஸா ஆகிய அமைப்புகளை உருவாக்கி முஸ்லிம்களின் குடும்ப விவகாரங்கள், சொத்துவிவகாரங்கள் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. இதில் ஃபத்வா எனப்படும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.

ஐந்து குழந்தைகளின் தாய் ஒருவர், மாமனாரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதைவிசாரித்த முஸ்லிம் அமைப்பு, தந்தை உறவு கொண்டதால், அவர் மனைவி என்ற தகுதியை இழந்துவிட்டார் என்று கூறி, கணவன், மனைவியை பிரித்து வைத்துள்ளது.

இன்னொரு வழக்கில் 19 வயது பெண் ஒருவரை மாமனார் பாலியல் பலாத்காரம் செய்தநிலையில், இனிமேல் அப்பெண் மகனுடன் சேர்ந்து வாழக்கூடாது, மாமனாருடன்தான் சேர்ந்து வாழவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது. இதுபோன்ற ஃபத்வாக்களுக்கு முஸ்லிம் சட்டவாரியம் அங்கீகாரம் அளிக்கிறது.

இவர்கள் நீதிமன்றங்களுக்கு போட்டியாக ஒருஅமைப்பை நடத்தி வருகின்றனர். இதை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.

சந்திரமவுலி பிரசாத், பினாகி சந்திரகோஸ் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

தார்-உல்காஸா என்ற அமைப்பு சட்டப் பூர்வமாக உருவாக்கப்பட்டது அல்ல. அதற்கு சட்ட அங்கீகாரம் எதுவும் இல்லை. காஸி முப்தி போன்றோர் தங்கள் சொந்தகருத்துகளை ஃபத்வாக்கள் மூலம் யார் மீதும் திணிக்கவோ, கட்டாயப்படுத்தவோ சட்டத்தில் இடமில்லை. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் ஆட்சியில் என்ன பின்பற்றப்பட்டது என்பது பற்றி கவலையில்லை. சுதந்திர இந்தியாவில் இது போன்ற உத்தரவுகளுக்கு இடமில்லை.

ஷரியத் சட்டத்தின்படி, பிறப்பிப்பதாக கூறப்படும் ஃபத்வாக்களுக்கு அடிபணியவேண்டும் என்ற அவசியம் எந்தக் குடிமகனுக்கும் இல்லை. அதற்கு சட்டஅங்கீகாரம் இல்லை. அவற்றை புறந்தள்ளி விடலாம். ஃபத்வாக்களை பின்பற்றவேண்டும் என்று யாராவது கட்டாயப்படுத்தினால், அது சட்டவிரோதம். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.