பிரதமர் நரேந்திரமோடி பிரேசில் புறப்பட்டு சென்றார்

 பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி நேற்று காலை புதுடெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டு சென்றார்.

ரஷ்யா, இந்தியா, பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸின் 6-வது மாநாடு பிரேசிலின் போர்ட்லேஸா நகரில் ஜூலை 14, 15ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திரமோடி பிரேசில் புறப்பட்டார்.

அவருடன் மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசியபாதுகாப்பு ஆலோசகர் ஏ.கே. தோவல், வெளியுறவுத் துறைச்செயலாளர் சுஜாதா சிங், நிதித்துறை செயலாளர் அரவிந்த் மாயாராம் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழுவும் பிரேசில் பயணம் மேற்கொண்டுள்ளது.

டர்பனில் நடந்த மாநாட்டின் போது பிரிக்ஸ் வங்கி அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இதுகுறித்து பிரேசில் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. மேலும் ஐ.நா. பாதுகாப்புகவுன்சில் விரிவாக்கம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து மாநாட்டில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜிஜின்பிங், தென்ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா, பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியாக சந்தித்துப் பேசவுள் ளார்.

ஜூலை 16ம் தேதி பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் கூடுகின்றனர். அப்போது, லத்தீன் அமெரிக்க நாடுகளான அர்ஜென்டினா, சிலி, கொலம் பியா, ஈக்வடார், கயானா, பராகுவே, பெரு, உருகுவே, வெனிசூலா ஆகிய நாடுகளின் தலைவர்களும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க பிரேசில் அழைப்பு விடுத்துள்ளது. எனவே அந்த நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...