பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி அம்மாநாட்டுக்கு வருகைதந்த சீன அதிபர் ஷிஜின்பிங்கை சந்தித்துபேசினார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு வர்த்தகம், எல்லை விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. பிரிக்ஸ் நாடுகளின்
உச்சி மாநாடு பிரேசிலில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் இந்தியா, சீனா,பிரேசில், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்
இம்மாநாட்டுக்கு வருகைதந்த சீனா அதிபர் ஜின்பிங்கை பிரதமர் நரேந்திரமோடி சந்தித்து பேசினார். இருவரும் சுமார் ஒன்றரை மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தைகளின் போது எல்லையில் சீனா மேற்கொள்ளும் ஊடுருவல்கள் குறித்த கவலையை பிரதமர் மோடி தெரிவித்தார். அதன்பின்னர் கைலாஸ்- மானசரோவர் யாத்திரைக்கான மாற்று வழி குறித்து இருவரும் விவாதித்தனர். மேலும் இருதரப்பு வர்த்தகம் தொடர்பாகவும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர.
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.