மாத்தி யோசி :

 ·ஓட்டுமொத்த காங்கிரஸ் ஸாரின் மைன்ட் வாய்ஸ் ..1) இந்த மோடி ஆட்சிக்கு வந்து 60 நாள் தான் ஆச்சி. இவரோட பேச்சு,நடவடிக்கை எதுவும் நம்பற மாதிரியே இல்லை! * எங்களது ஆட்சி பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாது,என பெரிசா பேசினார். ஆனால் நடந்து என்ன? ஆட்சிக்கு வந்து அமர்ந்தவுடனே எடுத்தமுதல் நடவடிக்கை என்ன?

*ஸ்விஸ் வங்கி யில் உள்ள கருப்புபணத்தை மீட்க, உயர்மட்ட குழு அமைத்தது தானே?!
*இது பழிவாங்கும் நடவடிக்கை யில்லாமல் வேறென்ன? 60 வருஷமா ஆட்சியில இருக்கிற காங்கிரஸ் காரர்களும்,அவங்களுக்கு வேண்டபட்ட தொழிலதிபர்களை தவிர வேறு யாரால ஸ்விஸ் வங்கி யில கணக்கு வெச்சிருக்க முடியும்ன்ற விஷயம், நாட்டுல சின்ன குழந்தைகளுக்கே தெரியும் போது மோடிக்கு இது தெரியாதா,என்ன?!

* இது பழி வாங்கும் நடவடிக்கை மட்டுமல்ல, காங்கிரஸ் பேரியக்கத்தின் மீதான மறைமுக தாக்குதல் இது!
2) அடுத்ததா,எதிர்கட்சிகளை அரவணைத்து செல்வோம் என வாய் கிழிய பேசினார்,மோடி!
*அப்ப சரி, 55 எம் பி க்கு குறைவா இருந்தாலும்,சட்டத்துக்கு புறம்பாக இருந்தாலும்,மரபுக்கு விரோதமாக இருந்தாலும் சரி, நம் அன்னை க்கு,எதிர்கட்சிதலைவர் பதவி கொடுப்பாங்கன்னு, வாய பொளுந்து கிட்டு பார்த்தா, இப்போ நமக்கும், நம் மணிமேகலை அன்னைக்கும், அல்வா கொடுக்கறாங்க! சட்டத்தை பத்தி பேசறாங்க லோக்சபா சபாநாயகர்! *10 வருஷமா,பிரதமரையே ஆட்டுவிச்ச,நம் அன்னை சாதாரண அதிமுக பெண் எம் பி கள் போல், பாராளுமன்றத்தில் அமர்வது, 128 வருஷ காங்கிரஸ்க்கு அவமானமில்லையா?!

3) இதோட முடியலை இவங்க திருவிளையாடல்! ரயில்வே, பொது பட்ஜெட்ல சொல்றாங்க!
* புல்லட் ரயிலாம்! 100 நவீன நகரமாம்! துறைமுக விமான நிலைய மேம்பாடாம்! ஆறுவழிச்சாலைகளாம்! நதிநீர் இணைப்பாம்! கங்கைநதியை சுத்தம் பண்ணுவாங்களாம்!

*புதிய மின் திட்டங்களாம்! எல்லோர்க்கும் வீடாம்! எங்க பார்த்தாலும் எய்ம்ஸ் ஆஸ்பிட்டல்களாம்!
* அணைத்து அரசு அலுவலகங்களும் கணிணி மயமாம்! துரிதமாக முடிவெடுத்து,உடனடியாக பணியை துவக்க, இரவுபகலாக உழைக்கும் மந்திரிமார்களாம்!!

4)* கடந்த60 வருஷமா, இந்த மாதிரி லட்சணத்துலயா, நாம ஆட்சி செய்தோம்!! இவங்கள இப்படியே விட்டா,
5 வருஷத்துல காங்கிரஸ்ஸையே காலி பண்ணிடுவாங்க! அதனாலே இவங்கள வேற மாதிரி அட்டாக் பண்ணனும்! மாத்தி யோசிக்கனும்!

*இன்னைக்கு,வெங்காயம்,உருளை நட்டாலே, நாலு மாசம் ஆகும், அறுவடை செய்ய! ஆனா காய்கறி விலை உயர்வுக்கு, 60 நாள்மோடி அரசு தான் காரணம்னு போராட்டம் பண்ணனும்! ஆர்பாட்டம் பண்ணனும்!!
*இங்க பக்கத்துல,இலங்கையில,1.50 லட்சம் தமிழர் படுகொலை செய்யபட்ட போது,வாயை மூடி கொண்டு இருந்துவிட்டு,கண்ணை மூடி கொண்டு உதவி செய்திருந்தாலும்,மனித உரிமை மீறபட்டிருந்தாலும்
அதை பற்றி அலட்டிக்காம இருந்த நாம், இப்போ, இஸ்ரேல்,பாலஸ்தீன தீவிரவாத ஹமாஸ் இயக்க சண்டையிலே,இஸ்ரேல் மனித உரிமை மீறிவிட்டதாக கூறி, இரண்டு நாள் பாராளுமன்றத்தை முடக்குனமாதிரி,நாம ஏதாவது, புதுசு புதுசா செய்யனும்!

* நாம் தான், திட்டமிட்டு பொய்பிரச்சாரம் செய்தாவது,மக்களை மோடிக்கு எதிராக திருப்ப, படாதபாடு படவேண்டும் எப்பாடு,பட்டாவது மோடிக்கெதிராக மக்களை திருப்ப முடியுமா,என முயற்சித்து பார்க்க வேண்டும்! பாராளுமன்றத்துலேயே,தூங்கி வழியும் நம் இளந்தலைவர் ராகுலை நம்பி பிரயோஜமில்லை!! இல்லைன்னா,நம்ம பிழைப்பு நாறிடும்!!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவ ...

மக்களின் விருப்பங்களை மதிக்கவில்லை எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் நேற்று ஒத்திவைக்கப் பட்டன. ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல ...

அரசியலில் தி.மு.க – வின் அரசியல் நாடகத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு – அண்ணாமலை அரசியலில் தி.மு.க.,வின் இரட்டை வேடத்தை கேள்வி கேட்க அனைவருக்கும் ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதார ...

கூட்டுறவு இயக்கத்தை பொருளாதாரத்துடன் இணைக்க மோடி அழைப்பு கூட்டுறவு இயக்கத்தை, சுழற்சி பொருளாதாரத்துடன் இணைப்பதன் அவசியத்தை பிரதமர் ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட ...

இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று மோடி உரை இந்திய அரசியல் சாசன தினத்தையொட்டி இன்று (நவ. 26), ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வ ...

மகாயுதி’ கூட்டணி வெற்றிக்கு வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ் சனிக்கிழமை (23-11-2024) அன்று வெளியான மகாராஷ்டிர சட்டப் பேரவைத் ...

மருத்துவ செய்திகள்

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...