நேபாள நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இரண்டு நாள்கள் பிரதமர் நரேந்திரமோடி சுற்றுப்பயணம் செய்யவுள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன .
இது குறித்து நேபாள உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் லட்சுமி பிரசாத்தகால் கூறியது: “மோடியின் பயணத்தையொட்டி, ராணுவவீரர்கள், ஆயுதப்படை போலீஸார், புலனாய்வு படையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.
நேபாள அரசு செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக இந்தியாவிலிருந்து அதிரடிப்படை வீரர்களைக்கொண்ட சிறப்புக்குழு காத்மாண்டுக்கு சனிக் கிழமை வரவுள்ளது’ என்றார்.
அங்கு ஏற்கனவே வி.வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே வழங்கப்படக் கூடிய ஸ்டாண்டர்டு செக்யூரிட்டி ஆபேரேஷன் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. மோடி வந்திறங்கும் நேபாளத்தின் திரிபுவன் விமான நிலையத்திலும் ஏர் சர்வையலன்ஸ் எனப்படும் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிக்கும் பாதுகாப்பு தீவிரப்படுத்த பட்டுள்ளது
இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லட்சுமிபிரசாத் தாக்கல் கூறுகையில், நேபால் ஆயுதபடை, போலீஸ், என்.ஐ.பி (நேஷனல் இன்வெஸ்டிகேஷன் பீரோ) மற்றும் அனைத்து செக்யூரிட்டி ஏஜென்ஸிகளும் தொடர்ந்து கண்காணித்துவருவதாக தெரிவித்தார்.
இந்திய பிரதமர் ஒருவர், நேபாளத்துக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்வது, கடந்த 17 ஆண்டுகளில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது .
பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.