கேரளாவின் காங்கிரஸ் முதல்வர் திரு உம்மன் சண்டி அவர்களுக்கு கோடிக்கணக்கன இந்திய தாய்மார்களின் சார்பாக எனது நன்ன்றியையும், பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்..
கேரள ஆளும் ஐக்கிய முன்னணியின் "மதுக்கொள்கையை" வெளியிட்டு பேசிய உம்மன்சண்டி, ஏற்கன்வே உள்ள 730 பாருடன் கூடிய மதுபானகடைகளில், 418 க்கு மீண்டும் உரிமம் வழங்கப்போவதில்லை..என்றும், மீதமுள்ள 300 கடைகளையும், ஆண்டுக்கு 10 சதவீதமானம் வீதம், 10 ஆண்டுகளில் முழுவதையும் மூடிவிடுவதாகவும் அறிவித்தது ஆச்சரியமானது..பாராட்டுக்குறியது..
"மது வீட்ட்ற்கும், நாட்டிற்கும் கேடு, ..மதுபானத்தை முற்றிலும் ஒழிக்கவேண்டும்," என்பனவெல்லாம் கேட்டு-கேட்டு புளித்துப்போன வாக்கியங்கள்.."சோம பானம்—சுறா பானம் " தோன்றிய காலத்திலிருந்தே குடித்துக் கொண்டிருப்பவர்கள் கேரளத்தினர்..
நாட்டின் "மிகப்பெரும்—குடி மக்கள்" கேரளத்தினர்.—.தண்ணிய போட்டுட்டு, "டிச்" பக்கம் உருண்டு கிடப்பவர்கள் அல்ல கேரளத்தினர்..–ஆனாலும் மதுதந்து போகும் "மானியங்களான"—சட்டம் ஒழுங்கு சீர்கேடு…பாலியல் வன்கொடுமை—உடல் நலம் சார்ந்த பிரச்சினைகள்…கேரளாவில் கொடிகட்டி பறப்பது உண்மைதான்..
தேர்தல் எதுவே இல்லாத இந்த காலகட்டத்தில், காங்கிரசின் கொள்கையான ஓட்டு வங்கி அரசியல் லாபம் பர்க்காமல், உம்மன்சண்டி, செய்திருக்கும் இந்த "மதுவிற்கு விடை கொடுக்கும்", அறிவிப்பு உண்மியிலேயே "கிரேட்"–இதை பாஜக காரனாக இருந்தாலும் மனம் திறந்து வரவேற்கிறேன்..
ஆனால் இந்த அறிவிப்பு எவ்வளவு தூரம் பலன் தரும்?—மது ஒரேயடியாக மறைந்து போகுமா?–கடைகளை மூடிவிட்டால், குடிப்பவன் குடியை மறந்து விடுவானா? என்ற கேள்விகளுக்கு உண்மையில் விடை என்ன என்பதை பார்ப்போம்..
"ஒருநாள் குடித்தாலும் அவன் ஆயுள் முழுதும் குடிகாரந்தான்"—இது குடிமொழி..—மது மனிதனின் மண்டையிலுள்ள சிறு மூளைக்கு "கிக்" தந்து, "இன்னும் தா—இன்னும் தா..""—" போதாது..போதாது.."–என கேட்கும் ஒருவகை "மனோ வியாதிதான்"—மதுப்பழக்கம்…எனவே குடிக்க ஆரம்பித்துவிட்டால், "பெக்குகள்" கூடுமே தவிர..குறையாது..(கிக்குகள்).."ஏறுமே தவிர இறங்காது.."
எனவே கடைகளை மூடிவிட்டால், ஏற்கனவே குடித்துக்கொண்டிருப்பவர்கள், "சரக்கு " கிடைக்கவில்லை என்பதற்காக, நிறுத்தி விடுவார்கள், என்று நாம் நினைத்தால், அது பேதமை.–.மாறாக "கிடைக்காது" என்ற இந்த " டிமாண்ட்" மனப்பான்மை, இன்னும் அதிக்மக குடிக்க வைக்கவும், அல்லது " வீடுகளில் –ஸ்டாக் " வைக்கவும் தோன்றும்..ஒரு வேளை "சரக்கு " கிடைக்காவிட்டால், "கள்ள சாரயத்தை" நாடும் அல்லது "காய்ச்ச " பழகி கொள்ளும்..
எப்படி அபின் கஞ்சா அடிமைகள் அது கிடைக்காவிட்டால் வன்முறை யாளர்களாக மாறுகிறார்களோ—அது போல "குடிக்கு அடிமைகள்" "பெக்குகள்" கிடைக்காவிட்டால் சமூகத்துக்கு அச்சுறுத்தல்களாக மாறூவார்கள்.–.திருட்டு கொள்ளை ஓங்கும்..சட்டம் ஒழுங்கு சீர்கெடும்..கள்ளச்சாராயம் கரை புரளும்.==.குடிகாரர்கள் போதை ஏறி..நாடி அடங்கி மண்மூடுவர்..
இதையெல்லாம் கருத்தில் கொண்டு, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்த பின்பே மதுக்கடைகளை மூடும் படலத்தை அரசு துவங்க வேண்டும்..
முதலில் புதுக்குடிகாரகள் உருவாகமல் அரசு தடுக்க வேண்டும் –அதற்கு "பழைய குடிகளுக்கு" லைசன்ஸ் தரவேண்டும்.."உரிமம்" இருந்தாலே "பாட்டில்" கிடைக்கும் என்ற விதியை கொண்டுவரவேண்டும்..
"மதுவிலிருந்து மீண்ட "மருவாழ்வு மைய்யங்களை" "டி அடிக்ஷன்" செண்டர்களை உருவாக்க வேண்டும்..மதுவிலிருந்து மீளும் சிகிச்சையில் முழுக்குடும்பமும் பங்கு கொள்ள வேண்டும் என்பதால், "குடும்ப பராமரிப்பு செலவை" அரசே ஏற்க வேண்டும்..
மதுக்கு அடிமை ஆனோருக்கான "மறு வாழ்வு சிகிசைக்கு" தனி ஆஸ்பத்திரிகள் ஊர் தோறும் உருவாக்க வேண்டும்..இயல்பாக வரும் நோய்களுக்கும், நோயாளிகளுக்குமே அரசு ஆஸ்பத்திகளில் இடம் இல்லை என்பதே இன்றைய நிலை…
மதுவினால் வந்த வருமானத்தை விட மது ஒழிப்புக்கு பலமடங்கு அதிகமாக செலவு செய்ய வேண்டியிருக்கும் இதை அரசு கவனத்தில் கொள்ளாவிட்டால் நாடு சுடுகாடாகும்..காரணம் தமிழ்நாட்டில் தற்போது 60 சதவீத இளைஞர்கள் மதுவிற்கு அடிமை என்பதே நிஜம்..இது ஒவ்வொரு நாளும் உய்ர்ந்து கொண்டே போகிறது..
இவ்வளவு முன்னெச்சரிக்கை ந்டவடிக்கைகள் எடுத்தால்தான் "குடியை குறைக்க முடியும்" என்பதால்தான், அரசு சாரய கடைகளை மூட மறுக்கிறதோ?—இல்லை இரண்டு..மூன்று..சாரய தயாரிப்பு கம்பெனிகளிடமிருந்து தினசரி பல்கோடி "தோட்டத்திற்கும்," "புரத்திற்கும்"–வருவதை வாங்கி அனுபவித்தவர்கள், அதில் சிறியதை நமக்கு தந்து, 37 பாரளுமன்ற சீட்டை வென்றவ்ர்கள்,எப்படி "டாஸ்மாக்—காமதேனுக்களை" மூட உடன்படுவார்கள்?—
எது எப்படியோ—உம்மன்சண்டி ஒரு நல்லவழி முறையை தைரியமாக காட்டி விட்டார்..அவருக்கு மீண்டும் ஒரு சபாஷ்..இந்த பாதைக்கு இனியாவது தமிழகம் திரும்பியாகவேண்டும்..
இல்லாவிட்டால் ஆளுபவர்களின் " குடும்பங்கள்..நாசமாய் போகும்"—என்று குடிமகன்களின், பெற்றோரும் உற்றமும் இடும் "சாபத்தை" யாரலும் தடுக்க முடியாது..
குடி (நாடு) வாழ்க——குடிமக்கள் ( நாட்டு மக்கள் ) வாழ்க
குடி ( நாடு) வாழ— குடி ( மது) ஒழிக…
குடி ஒழிய ( மது )—குடிமக்கள் ( மது அருந்துவோர்) திருந்துக..
ஜெய் ஹிந்த்
நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்
பாஜக மாநிலப் பொருளாளர்
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.