··பிரதமர் அறிவித்துள்ள வீட்டுக்கு ஒரு வங்கிக்கணக்கு (ஜன் தன்) திட்டத்தை தொடங்கிவைப்பதற்காக சென்னை வந்திருந்த ரவி சங்கர் பிரசாத் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார்.
முதல்வருடனான 40 நிமிட சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்: "முதல்வருடனான சந்திப்பு ஆக்கப் பூர்வமாக அமைந்தது. பிரதமரின் வீட்டுக்கு ஒரு வங்கிக்கணக்கு (ஜன் தன்) திட்டத்தை முதல்வர் ஜெயலலிதாவிடம் விரிவாக எடுத்துரைத்தேன். எலக்ட்ரானிக் உபகரணங்கள் தயாரிப்புக்கு வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை தமிழக் அரசு பயன் படுத்திக் கொள்ள வலியுறுத்தினேன்"
பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை பற்றியும் முதல்வரிடம் விளக்கினேன். இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பிராட்பேண்ட் வசதி செய்துதர திட்டமிட்டுள்ளோம். முதற்க்கட்டமாக இந்த ஆண்டு 60,000 பஞ்சாயத்து களுக்கும், அடுத்த ஆண்டு 1 லட்சம் பஞ்சாயத்துகளுக்கும். அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும், 1 லட்சம் பஞ்சாயத்துகளுக்கும் பிராட்பேண்ட் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
தமிழகத்தில் தொழில்நுட்ப பயன்பாடு சிறப்பாக இருப்பதால், பிரதமரின் கனவு திட்டத்தை தமிழக அரசு வெற்றியடையச் செய்யவேண்டும் என கேட்டு கொண்டதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.