அமைதியும், அஹிம் சையும் இந்திய சமூகத்தின் மரபணுவில் பின்னி பிணைந்திருக்கின்றன, இந்திய மண் அமைதியை வலியுறுத்திய புத்தமகான் பிறந்து வாழ்ந்த பெருமையுடையது என்று ஜப்பானில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார் .
பிரதமர் நரேந்திர ஜப்பானின். சேக்ரட் ஹார்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய போது பேசியதாவது :
அமைதியும், அஹிம்சையும் இந்திய சமுகத்தின் மரபணுவில் பின்னி பிணைந்துள்ளன . இந்திய மண் புத்தமகான் பிறந்து வாழ்ந்த பெருமையுடையது. புத்தர், அமைதியை நிலைநாட்டவே வாழ்ந்தார். அதற்காகவே பாடுபட்டார். அந்தசெய்தி நாடு முழுவதும் பரவிக் கிடக்கிறது. எனவே அணுசக்தி மூலம் இந்தியா அழிவை ஏற்படுத்தாது.
இந்தியா அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத தற்குக் காரணம் அதில் சில குறைபாடுகள் இருப்பதே. சர்வதேச சமூகம் சில நடை முறைகளை அறிமுகப் படுத்தலாம். ஆனால் இத்தகைய ஒப்பந்தங்களையும் கடந்து கட்டுப் பாட்டுடன் இருப்பது சமூகத்தின் சிறப்பு. மகாத்மாகாந்தி தலைமையில் கோடிக்கணக்கான மக்கள் அஹிம்சா வழியில் சுதந்திரத்தை பெற்றனர். இந்தியசமூகம் அஹிம்சையை கடைபிடிக்கிறது என்பதற்கு இதுவே மிகப் பெரிய அடையாளம். அமைதியும், அஹிம்சையும் இந்திய சமூகத்தின் மரபணுவில் பின்னிப் பிணைந்திருக்கின்றன..
இந்து மதத்தின் பெண்தெய்வங்களில், சரஸ்வதி கல்விக்கடவுளாக, லட்சுமி செல்வத்தை அளிக்கும் கடவுளாக, மஹா காளி பாதுகாப்பை நல்கும்தெய்வமாக, அன்ன பூரணி உணவு பாதுகாப்பை தரும் தேவியாக இருக்கின்றனர். மதத்தில் பெண்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இருப்பது போல், இந்திய அரசியலமைப்பிலும் பெண்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. எனது அமைச் சரவையில், 25% பேர் பெண்கள். ஏன், இந்தியவெளியுறவு அமைச்சரும் ஒரு பெண்.
இங்கிலாந்து இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்து சென்றபோது நாட்டில் 9% பெண்கள் மட்டுமே கல்விகற்றிருந்தனர். ஆனால், அதன்பிறகு பெண் கல்விக்காக பல்வேறு கட்டங்களில் பலவகையான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன.
நான் குஜராத் முதல்வராக இருந்த போது, பல்வேறு அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட பரிசுப்பொருட்களை ஏலம் விட்டதன் மூலம் கிடைத்த ரூ.78 கோடி பெண்கல்விக்காக வழங்கி இருக்கிறேன். மாறிவரும் சர்வதேச சூழலில் மகளிர் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பது மிகவும் அவசியம்" என்றார்.
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.