தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்" என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்ககூடாது என்று சுப்பிரமணிய சாமி கூறியது பற்றி கருத்துசொல்ல முடியாது. கட்சி தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி போன்ற பொறுப்பில் உள்ளவர்கள் கூறும் கருத்துகளுக்கு மட்டுமே விளக்கம்தரலாம்.
ஆனால் கட்சிபொறுப்பில் இல்லாதவர்கள் கூறியகருத்துக்கு எந்த விளக்கமும் சொல்லமுடியாது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது குறைந்துள்ளது. மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிகள் எடுத்துவருகிறோம்.
இலங்கை அரசிடம் இருந்து இந்திய மீனவர்களின் படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நல்ல தீர்வு ஏற்பட்டதைபோல், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலும் தீர்வு காணப்படும்.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழக முதலவர் சிறப்பான முயற்சி எடுத்தார். அதேநேரம் மாநில அரசு எடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் மத்திய அரசின் ஒத்துழைப்பு இருந்தால்தான் அதில் தீர்வை எட்டமுடியும். அந்த வகையில், தமிழக அரசின் முயற்சிக்கு மத்திய அரசின் சிறப்பான ஒத்துழைப்பும் இருந்தது இவ்வாறு அவர் கூறினார்.
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.