ஊழல் நிறைந்த காங்கிரஸ்கூட்டணி அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும். இந்த தடவை மராட்டியத்தில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என்று கோலாப் பூரில் நடந்த தேர்தல்பிரசார கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா பேசினார்.
மராட்டிய மாநிலம் கோலாப்பூர் விமானநிலையம் அருகே பா.ஜ.க சார்பில் பிரமாண்ட தேர்தல்பிரசார பொதுக் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் ஏராளமானவர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் அமித்ஷா பேசுகையில் கூறியதாவது:–
நண்பர்களே, மராட்டியத்தில் இந்த முறை பா.ஜ.க தான் ஆட்சி அமைக்கப் போகிறது. நான் விமானத்தில் இங்கு வந்த போது என்னுடன் வந்த தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் வினோத் தாவ்டே ஆகியோரிடம், கூட்டணியில் நிலவும் தொகுதிபங்கீடு விவகாரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று கூறினேன்.
அதற்கு அவர்கள், நாங்கள் சிறப்பானவழியில் முயன்று வருகிறோம், ஆனால் சிவசேனாவிடம் இருந்து உரியபதில் வரவில்லை என்றனர்.
இரு கட்சியினரிடமும் நான் ஒன்றைசொல்ல விரும்புகிறேன். பா.ஜ.க 2 அடி முன்னால் எடுத்துவைத்தால், மற்றவர்களும்(சிவசேனா) 2 அடி முன்னால் எடுத்து வைக்கவேண்டும். அதன்பின் மராட்டியத்தை மாற்றுவதற்கான வழிமுறைகளை தொடங்கவேண்டும்.
தொகுதி பங்கீட்டில் பா.ஜ.க தொண்டர்கள் சுய மரியாதையுடன் கூடிய தீர்மானத்தை விரும்புகிறார்கள். எனவே, இருகட்சியினரின் சுயமரியாதையும் பாதுகாக்கப்பட வேண்டும். மராட்டியத்தை மாற்றுவதற்கு இது மிகமுக்கியமான வழிமுறை.
மராட்டியத்தின் பெருமையையும், முன்னேற்றத்தையும் உறுதிபடுத்தவேண்டும் என்றால், ஊழல் நிறைந்த காங்கிரஸ்– தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசை பொது மக்கள் தூக்கி எறியவேண்டும். 15 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் மராட்டியத்தை சீரழித்துவிட்டன. முறையான விசாரணை நடத்தினால், மாநில அரசில் அங்கம்வகிக்கும் அனைத்து தலைவர்களும் ஜெயிலுக்குதான் போகவேண்டும். நாட்டில் வேறு எந்த தலைவர்களையும் போல் அல்லாமல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அரசியலை வியாபாரமாக்கி விட்டார்.
அஜித் பவார் ஊழலில் சிக்கி திணறுகிறார். மராட்டியத்தில் ஊழல்மேல் ஊழல் மலிந்து காணப்படுகிறது. எனவே நடைபெற இருக்கும் தேர்தலில் பா.ஜ.க கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அமித்ஷா பேசினார்.
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.