அனைத்து மாநில முதல்வர் களுடனும் இணைந்து நாட்டை முன்னேற்ற நடவடிக்கை

 அனைத்து கட்சி முதல்வர்களுடனும் இணைந்துசெயல்பட்டு தேசத்தை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் .

தென்னிந்தியாவின் முதலாவது உணவு பூங்காவை கர்நாடகமாநிலம், பெங்களூர் அடுத்த தும் கூரில் இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம் ராத் கவுர் பாதல், கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சதானந்த கவுடா, அனந்த் குமார் மட்டுமின்றி முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில அமைச்சர்களும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் நரேந்திர மோடி பேசியதாவது: மாநிலத்திலும், மத்தியிலும் வேறுகட்சிகளின் ஆட்சி நடந்தாலும், தேசம் ஒன்றுதான். கர்நாடக முதல்வரும், பிரதமரும் வேறு கட்சியினராக இருக்கலாம், ஆனால் நாட்டு நலனுக்காக ஒன்று சேர்ந்துள்ளோம்.

அனைத்து மாநில முதல்வர் களுடனும் இணைந்து நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஐ.மு.,கூட்டணி ஆட்சியில் மத்திய-மாநில அரசுகள் நடுவே நல்லுறவு ஏற்பட வில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசு உதவிசெய்வதாக குற்றச்சாட்டு இருந்துவந்தது.

ஆனால் அனைத்து மாநிலங்களையும் முன்னேற்ற வேண்டும் என்பது தான் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் நோக்கம். உணவு மற்றும் விவசாயபொருட்கள் வீணாவதை தடுத்தால் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடியை நம்மால் சேமித்துவிட முடியும்.

அன்னமே தெய்வம் என்பது நமது நாட்டின் பழ மொழி. ஜெய் கிசான், ஜெய்ஜவான் என்ற கோஷத்துடன், ஜெய்விஞ்ஞான் என்ற கோஷத்தையும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முன்வைத்தார். தற்போதைய மத்திய அரசும் அந்த கோஷத்துக்கு ஏற்ப, விவசாயம், ராணுவம், விஞ்ஞானம் உள்ளிட்ட மூன்றுக்கும் சமமான முக்கியத்துவத்தை கொடுக்கும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...