நாட்டின் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக நரேந்திர மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அமெரிக்கா வின் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐ.நா. சபை ஆண்டு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தபோது 2002 ஆம் ஆண்டு மத கலவரங்களைக் காரணம்காட்டி அவருக்கு அமெரிக்கா விசாதர மறுத்தது. பின்னர் பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டது முதலே அமெரிக்கா மோடியுடன் நட்புபாராட்டி வருகிறது. தற்போது ஐ.நா. ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக 5 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று பிற்பகல் அமெரிக்கா புறப்பட்டுசென்றார்.
ஐ.நா.வில் உரையாற்றும் பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் ஒபாமா வையும் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தை ஏற்பாடுசெய்வதற்காக 10 நாள் பயணமாக சுஷ்மா ஸ்வராஜ் அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் குறித்து அவர் ஆய்வு செய்கிறார் . முன்னதாக ஐ.நா தலைமையகத்தில் நேற்று இங்கிலாந்து, மாலத்தீவு, சூடான், நார்வே, கிர்கிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சுஷ்மா சந்தித்து பேசினார். பிரதமர் மோடி தலைமையிலான குழுவுடன் சுஷ்மா ஸ்வராஜ் நாளை இணைந்து கொள்கிறார்.
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.