பால் தாக்கரேக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சிவ சேனாவை விமர்சிக்க மாட்டேன்

 பால் தாக்கரேக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சிவ சேனாவை விமர்சிக்க மாட்டேன் என மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். .

பா.ஜ.க – சிவசேனா இடையிலான கூட்டணி முறிந்தநிலையில், இருகட்சிகளும் தனித் தனியே மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலை சந்திக்கின்றன. இம்மாதம் 15-ம்தேதி நடைபெறவுள்ள தேர்தலையொட்டி, அம்மாநிலத்தில் பா.ஜ.க,,வுக்காக பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

சாங்லி மாவட்டத்தின் டாஸ் கான் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக் கிழமை) தேர்தல் பிரச்சாரம் செய்து பேசும்போது, "இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் சிவ சேனா கட்சியை விமர்சித்து நான் எதுவும்பேசாமல் இருப்பது குறித்து அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சிவ சேனா நிறுவனர் பால்தாக்கரே காலமான பின்பு மகாராஷ்டிரத்தில் நடைபெறும் முதல் சட்டப் பேரவைத் தேர்தல் இது. அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அவருக்கு மரியாதைசெலுத்தும் விதமாக, சிவ சேனாவை விமர்சித்து ஒரு வார்த்தைக்கூட பேசக் கூடாது என்று முடிவு செய்துள்ளேன் . இது, அவருக்கு நான் செலுத்தும் அஞ்சலியாகவே கருதுகிறேன்.

மகாராஷ்டிரம் மாநிலத்தில் இருந்து ஊழலை முற்றிலுமாக ஒழிக்க, பெரும்பான்மை பலத்துடன் பாஜக தலைமையில் ஆட்சி அமையவேண்டும். ஊழல் விஷயத்தில் காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் ஒரே மாதிரி தான் உள்ளன. மகாராஷ்டிரத்தை அவர்கள் அழிவுப்பாதையில் கொண்டு சென்று விட்டனர்" என்றார் மோடி.

மகாராஷ்டிர மாநிலம் பீட் நகரில் பிரதமர் மோடி பேசியதாவது:

15 ஆண்டு கால காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆட்சியில் நீங்கள் பெற்றது என்ன? மகாராஷ்டிரம் வளர்ச்சி அடைந்ததா? விவசாயிகள், இளைஞர்கள், தலித்கள், பழங்குடியினர், பெண்கள் என யாராவது பயன் அடைந்தார்களா? இல்லை நகரங்கள், கிராமங்கள்தான் பயன் அடைந்தனவா?

குஜராத்தைவிட மகாராஷ்டிரம் சிறப்பாக உள்ளதாக அவர்களால் கூறமுடியுமா? இவர்கள் தேசியவாதிகள் இல்லை. ஊழல்வாதிகள். உங்கள் நிலத்தை அபகரிப்பவர்கள் உங்களுக்குத் தேவையா? இவர்களிடம் இருந்து மாநிலத்தை விடுவியுங்கள். பாஜக வெற்றியை உறுதி செய்யுமாறு உங்களை கேட்டுக்கொள்ளவே இங்கு வந்தேன். மகாராஷ்டிரம் வளர்ச்சி அடைந்தால்தான் நாடு வளர்ச்சி அடையும். மகாராஷ்டிரம் காப்பாற்றப்பட வேண்டும். இம்மாநிலத்தின் வளர்ச்சியை நீங்கள் விரைவுபடுத்த முடியும். இதற்கு இங்கு பாஜக அரசு அமையவேண்டும்.

60 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்தவர்கள் எதுவும் செய்யவில்லை. இன்று 60 நாட்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார்கள். 60 மாதங்களில் நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன்.

மகாராஷ்டிரத்தில் சீனா தொழிற்பூங்கா அமைக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மும்பை – அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்துக்கு ஜப்பான் உதவியளிக்கும். இவற்றின் மூலம் இம்மாநிலம் வளர்ச்சி அடையும். மகாராஷ்டிரத்தில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்தால் மாநிலத்தின் கனவுகள் நிறைவேறும். இவ்வாறு மோடி கூறினார்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...