சண்டையின் போது, எதிரிகள் அலறினார்கள்

 எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு இந்தியா துணிவோடு தக்கபதிலடி கொடுத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் சொந்த ஊரான பாராமதியில் வியாழக் கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசியதாவது:

இந்திய எல்லை பகுதியில் வியாழக் கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையின்போது, எதிரிகள் அலறினார்கள். பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு நமது வீரர்கள் துணிச்சலுடன் பதிலடி தந்துள்ளனர்.

முந்தைய காலங்களை போன்று, பாகிஸ்தானின் அத்து மீறல்களை இந்தியா பொறுத்துக் கொண்டிருக்காது. இந்தியாவில் நிலைமை மாறி விட்டதை இப்போது அவர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், எல்லை பகுதியில் நடைபெற்றுவரும் மோதல்களை, சிலர் அரசியல் லாபத்துக்காக விமர்சித்து வருகின்றனர். இது போன்ற விவகாரங்களை அரசியலாக்க கூடாது. நாட்டில் தேர்தல்வரும்; போகும். அரசாங்கமும் மாறும்.

ஆனால், அரசியல் லாபத்துக்காக விவாதம் நடத்தி, எல்லை பகுதியில் போராடும் நமது வீரர்களின் நம்பிக்கையை குலைக்கக்கூடாது.

எல்லைப் பகுதியில் உள்ள நமது வீரர்கள் என்னுடைய நோக்கத்தைப் புரிந்துகொண்டு செயல்படுகிறார்கள். அதை வெறுமனே சொற்களால் வர்ணிக்க தேவையில்லை.

சண்டை நடைபெறும் இடங்களில் துப்பாக்கியால் தான் பேச முடியும். அதைத் தான் நமது வீரர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் வீரர்களின் தாக்குதல்களால், எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவும்நேரத்தில், அதை கவனிக்காமல் நான் மகாராஷ்டிரத்தில் தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக சரத்பவார் குற்றம் சாட்டுகிறார். பாதுகாப்புத்துறை அமைச்சராக, சரத் பவார் பதவி வகித்தபோது எல்லைப்பகுதியில் பாகிஸ்தான், சீன ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அந்தநேரத்தில், எல்லை பகுதிக்கு செல்வது குறித்து நீங்கள் (சரத் பவார்) கவலைப்பட்டீர்களா?

உங்கள் ஆட்சிக் காலத்தில் தான், மும்பை, மாலேகான், புணே ஆகிய நகரங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. உங்களால் பயங்கர வாதிகளைப் பிடிக்க முடியவில்லை.

அவர்களைத் தப்பிக்க வைத்து விட்டீர்கள். தேசப்பற்று காரணமாகவே, அந்த விவகாரத்தை நாங்கள் ஒரு போதும் அரசியாலாக்கியதில்லை என்றார் நரேந்திர மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

குழந்தை திருமணம் இல்லாத இந்திய ...

குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் அன்னபூர்ணா தேவி இன்று பால் விவாகம் முகத் பாரத் தேசிய இயக்கத்தை தொடங்கி வைக்கிறார் குழந்தை திருமணம் இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித ...

தமிழக கூட்டுறவு வங்கிக்கு அமித்ஷா விருது வழங்கினார் டில்லியில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு விழா நேற்று நடந்தது. ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட் ...

அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எனது  கடமைகளை செய்கிறேன் – பிரதமர் மோடி '' யாருடைய அதிகார வரம்பையும் மீறாமல், அரசியலமைப்பு சட்டத்திற்கு ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்க ...

நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன 'நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன' என மக்களவை ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...