நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் வியக்கத்தக்க மனிதர்

 உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் கொச்சியில் நேற்று மறைந்தார். அவருக்கு வயது 100. அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1915 நவம்பர் 15-ம் தேதி கேரள மாநிலம் பாலக்காட்டில் வி.ஆர். கிருஷ்ணய்யர்பிறந்தார். தலைச்சேரி பேஷல் மிஷன் ஆரம்ப பள்ளி, பாலக்காடு விக்டோரியா கல்லூரி, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற அவர் இறுதியாக சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

1937 முதல் வழக்கறிஞராக பணியாற்றினார்.. சிறுவயது முதலே கம்யூனிச கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட அவர், தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளில் அதிக அளவில் ஆஜரானார்.

1952-ல் அவர் மெட்ராஸ் மாகாண சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். அதன்பின்னர் 1957-ல் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான கேரள அரசில் சட்டம், நீதித்துறை, உள்துறை, நீர்ப்பாசனம், மின்சாரம், சிறை, சமூகநலம் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார்.

1959 முதல் மீண்டும் வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டார். 1965 சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். இதன்பின்னர் முழுநேர மாக வழக்கறிஞர் தொழிலில் இறங்கினார்.

1968 ஜூலை 2-ம் தேதி கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். 1973 ஜூலை 17-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணி யாற்றியபோது வரலாற்று சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கினார்.

கடந்த 1975-ம் ஆண்டில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ரேபரேலி தேர்தல் தொடர்பான வழக்கு வி.ஆர். கிருஷ்ணய்யர்முன்பு வந்தது. இந்திரா பிரதமராக தொடரலாம் ஆனால் அவர் நாடாளுமன்றத்தில் வாக்களிக்க முடியாது என்று தீர்ப்பளித்தார்.

இந்தத் தீர்ப்பில் 6 மாதங்களில் மீண்டும் தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் இந்திரா காந்திக்கு ஏற்பட்டது. இதன்தொடர்ச்சியாகத்தான் 1975 ஜூன் 24-ம் தேதி நெருக்கடி நிலையை இந்திரா அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

கடந்த நவம்பர் 15 ம் தேதி தனது 100 வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கலும், அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.

கிருஷ்ணய்யர் மறைவு குறித்து மிக துயரம் அடைந்தேன். சிறந்த வக்கீலாகவும், போற்றத்தக்க வகையில் நீதிபதியாகவும் பணியாற்றியவர் கிருஷ்ணய்யர் . மனித நேயமிக்க இவரது காலத்தில் அரும் பெறும் சாதனைகள் படைத்துள்ளார். எப்போதும், நான் அவரை சந்தித்த காலத்தில், அவருடன் பேசிய காலத்தில் அவர் ஒரு வியக்கத்தக்க மனிதராக திகழ்வார். அவருடன் நான் பழகிய நாட்கள் மிக சிறப்பானது. அவருடன் கலந்துரையாடியது, அவர் எனக்கு எழுதிய கடிதங்கள் குறித்து நான் இப்போது நினைவுகூர்கிறேன். எப்போதும் இந்திய நலம் குறித்தே அவரது எண்ணம் இருக்கும். அவருக்கு சிறம் தாழ்த்தி தலை வணங்குகிறேன். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினரது துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்த ...

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தாதது அதிர்ச்சியளிக்கிறது நாராயணன் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த மாட்டோம் என ...

இந்தியாவின் சர்வதேச அறிவியல் வ ...

இந்தியாவின் சர்வதேச அறிவியல் விழா இந்திய சர்வதேச அறிவியல் விழா, 2024 நவம்பர் 30 ...

பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு ...

பிரதமரின்  மத்திய மீன்வளர்ப்பு மேப்பாட்டுத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒப்புதல் பிரதமரின் மத்திய மீன்வளர்ப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நீர்வாழ் ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலம ...

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் பதவி முடிவு பிரதமரின் முடிவே இறுதியானது -ஏக்நாத் ஷிண்டே மஹாராஷ்டிராமாநிலத்தில் முதலமைச்சராகபணியாற்றியதில்திருப்திகரமாகவும், தாம் பொதுவான மனிதர்கள் என்றும் இடைக்கால ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்ட ...

மகாராஷ்டிர அறிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மகாராஷ்டிர மாநிலத் தேர்தல்களில் மஹாயுதி அணி வெற்றி, MVA ...

முக்கிய திட்டங்களுக்கு மத்திய ...

முக்கிய  திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் இந்தியாவில் இயற்கை வேளாண்மையை மேம்படுத்து வதற்கான திட்டம் உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...