காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை தடுக்க வேண்டும்

 காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதியிடம் மத்திய நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மாநில துணை தலைவர் கருப்பு உள்ளிட்டோர் நேரில் வலியுறுத்தினர்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு, ராசிமணல் ஆகிய இடங்களில் சுமார் 48 டிஎம்சி அளவுக்கு நீரைத் தேக்கி வைக்கும் வகையில் இரண்டு அணைகளைக் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆரம்பநிலைப் பணிகளையும் அந்த மாநில அரசு தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தில்லியில் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதியை மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், காவிரிடெல்டா விவசாயிகளுடன் வியாழக் கிழமை சந்தித்தார்.

அப்போது, "காவிரியின் குறுக்கே அணைகட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக்கூடாது. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின் படியும், அதை ஏற்பதாக ஒப்புதல் அளித்த கர்நாடாக அரசின் இசைவின் படியும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று உமாபாரதியை அவர் கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக ராதாகிருஷ்ணன் அளித்த மனுவை பெற்றுக்கொண்ட உமா பாரதி, கோரிக்கையைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...