ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் பங்கேற்ற கூட்டத்தில் இரு நாடுகளுக்கிடையே பெட்ரோல், எரிவாயு, ராணுவ ஒத்திகை,அணுசக்தி உள்ளிட்ட 16 ஓப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் செய்தியாளர்களுக்கு இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய மோடி கூறுகையில், அதிபர் புதின் இந்தியா வந்திருப்பதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன். பாதுகாப்பு துறையில் இந்தியாவின் சிறந்த நட்பு நாடாக ரஷ்யா தொடரும். இந்திய அணுசக்தி மின் உற்பத்தியில் கூடங்குளத்தின் பங்கு 20 விழுக்காடு. கூடங்குளத்தில் 2,3,4 ம் அணு உலைகள் செயல்படுத்தப்படும்.
நவீன ஹெலிகாப்ட்ரை இந்தியா தயாரித்து வழங்க ரஷ்யா ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு வருங்காலத்தில் மேலும் பலப்படும். இந்தியாவில், ரஷ்யாவின் உதவியுடன் மேலும் 10 அணுஉலைகள் அமைக்கப்படும் என்று மோடி தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் புதின் பேசுகையில், ரஷ்யா-இந்தியாவுடனான உறவு வலுப்பெற காரணமாக இருந்தவர் வாஜ்பாய். அவர் ஆட்சியில் இருந்த காலத்திலேயே எனக்கு மோடியை தெரியும். பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ரஷ்யா இடையே நல்லுறவு அதிகரித்துள்ளது.
இந்தியாவுடன் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்த ரஷ்யா விரும்புகிறது. இந்தியாவுடனான உறவுகளுக்கு ரஷ்யா எப்போதுமே முன்னுரிமை கொடுக்கும். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் சிறந்த முறையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. .புதிய வாக்குறுதிகளும், ஒப்பந்தங்களும் இரு நாடுகளுக்கு இடையே உருவாகியுள்ளது என்றார்.
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.